Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆன்மீக சுற்றுப்பயணம் சென்ற சசிகலா, தன் அரசியல் பயணம் குறித்து சூசக அறிவிப்பு; அதிமுக என்னவாகும்?

    ஆன்மீக சுற்றுப்பயணம் சென்ற சசிகலா, தன் அரசியல் பயணம் குறித்து சூசக அறிவிப்பு; அதிமுக என்னவாகும்?

    அதிமுகவை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் சுற்றுப்பயணம் செய்து வரும் சசிகலா, அதிமுகவின் தற்போதைய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதிக்கு சென்றுள்ளார். 

    சிறையில் இருந்து விடுதலையான பின் அதிமுக கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா, அதிமுக கட்சியை கைப்பற்றும் முனைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார். சுற்றுப்பயணத்தில் அதிமுக தொண்டர்களை நேரில் சந்தித்து அவர்களின் விருப்பங்கள் மற்றும் ஆதரவினை கேட்டு வருகிறார். 

    சமீபத்தில் கூட சிவகங்கை மற்றும் திருசெந்தூர் வட்டாரப் பகுதிகளில்  சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக அதிமுகவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா இருந்து வருகிறார். இதனால், அவர் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    சசிகலாவின் கணவர் நடராஜனின் நினைவு நாளில் ஓ.ராஜா சசிகலா அருகிலேயே இருந்ததும், டி.டி.வி.தினகரன் சசிகலாவை சந்திக்காததும் கட்சியினரிடையே சர்ச்சையை கிளப்பியது. 

    இவ்வளவு குழப்பத்திற்கு மத்தியில் சசிகலா தன்னுடைய அடுத்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த ஆன்மீக சுற்றுப்பயணத்தில், இந்த முறை நாமக்கல், சேலம், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை சுற்றி வர முடிவு செய்திருந்தார். நேற்று காலை திருச்சிக்கு சென்றிருந்த அவர் நாமக்கல், முசிறி, தொட்டியம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய பகுதிகளை சுற்றி உள்ள கோவில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இப்பொழுது சேலம் பகுதிக்கு வந்துள்ளார். 

    சசிகலாவை கடுமையாக எதிர்த்து வரும் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான, எடப்பாடி தொகுதிக்கு சசிகலா வந்தது பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியது.

    இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் சசிகலாவுக்கு மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து, மலர்கள் தூவி ஏகபோக மரியாதை அளித்தனர். சசிகலா அங்குள்ள எடப்பாடி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சின்னாண்டி பக்தர் சிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அங்குள்ள நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். 

    அதேநேரத்தில் சேலம் சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு தூணுக்கு சசிகலா சென்றிருந்த போது அவருக்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்பது தொண்டர்களின் வேண்டுகோள். ஆனால், இதனை எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் தான் அவரை கேள்வி கேட்க வேண்டும். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. அதனை மீண்டும் நிலைநாட்டுவோம் என்று கூறியுள்ளார். 

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....