Friday, May 3, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஆவின் நிறுவனத்தில் வேலை...ஆனால் எழுத்து தேர்வு இல்லை..

    ஆவின் நிறுவனத்தில் வேலை…ஆனால் எழுத்து தேர்வு இல்லை..

    ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    திருப்பூர் மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மொத்தம் 8 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 

    இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியாக, இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பை (B.V.Sc & A.H) படித்திருக்க வேண்டும். அத்துடன்  கணினி இயக்கம் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், இப்பணிக்கு மாத ஊதியமாக ரூ.43,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த தேர்வானது, வருகிற 14.12.2022 அன்று நடைபெறவுள்ளது. 

    தேர்வு நடைபெறும் இடம்: திருப்பூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோட், திருப்பூர் – 641605

    இந்த பணியிடம் தொடர்பாக மேலும் விவரங்களை அறிய https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/11/2022112379-1.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

    புரோ கபடி போட்டி: படுதோல்வியடைந்த தெலுங்கு டைட்டன்ஸ்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....