Friday, March 24, 2023
மேலும்
    Homeஆன்மிகம்திருப்பதி செல்பவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, கூட்ட நெரிசலைத் தவிர்க்க கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!

    திருப்பதி செல்பவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, கூட்ட நெரிசலைத் தவிர்க்க கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!

    திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இலவச தரிசன சீட்டு வழங்கப்படுவது வழக்கம். ஒருநாள் ஒன்றுக்கு 25 ஆயரத்திற்கும் மேற்பட்ட தரிசன சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதை திருப்பதி கோவில் நிர்வாகம் நிறுத்திவைத்துள்ளது. 

    திருப்பதி கோவிலுக்கு எப்போதும் வரும் பக்தர்கள், ஏழுமலையானை தரிசன செய்வதும் நேத்திக் கடன் செலுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். வருகின்ற நான்கு நாட்கள் பொது விடுமுறை என்பதால் திருமலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொது தரிசனத்திற்கு வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன சீட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

    இன்று ஒரே நாளில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொது தரிசன சீட்டுகள் வாங்க குவிந்தனர். சுமாராக 25 ஆயிரம் பேர் பொது தரிசன சீட்டு பெற்றவர்கள், ஏழுமலையானை தரிசித்தனர். மீதம் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரண்டு மூன்று நாட்கள் காத்திருந்து, தரிசனம் செய்ய வேண்டிய சூழல் நிலவி வந்த நிலையில் இன்று அதற்கான இலவச தரிசன சீட்டுகள் விநியோகம் செய்யும்போது கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    திருப்பதி கோவில் நிர்வாகம் கூட்ட நெரிசலைகட்டுப்படுத்துவதற்காக, இலவச தரிசன சீட்டுகள் வழங்கும் முறையை தற்போது ரத்து செய்துள்ளது. இன்று முதல் தரிசன சீட்டுகள் இல்லாத பக்தர்களும் நேரடியாக மலைக்கு சென்று தரிசனத்தில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எப்போதும் போல் பக்தர்கள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு அவ்வப்போது திறந்துவிடப்பட்டு பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்யும் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    thoothukudi sathankulam

    சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது.  தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை...