Friday, March 31, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'பாசமுள்ள பிள்ளைகளே....' - பீஸ்ட் குறித்து பேசிய தளபதி விஜய்யின் தந்தை!

    ‘பாசமுள்ள பிள்ளைகளே….’ – பீஸ்ட் குறித்து பேசிய தளபதி விஜய்யின் தந்தை!

    ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் காத்திருந்த பீஸ்ட் திரைப்படமானது மிகவும் கோலகலமாக இன்று வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியான ஒவ்வொரு திரையரங்குகளிலும் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்க்கும் நமக்கும், அவர்களின் விழாக்கொண்டாட்டம் ஒட்டிக்கொள்கிறது. 

    தளபதி விஐய் அவர்களின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படமானது பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது என்பதை பலரும் அறிவர். பீஸ்ட் திரைப்படமானது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. 

    விமர்சன ரீதியாக பீஸ்ட் திரைப்படத்தை நோக்கினால் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. அதேசமயம், விமர்சனத்தில் பெரும்பாண்மையை நோக்குவோமாயின் பீஸ்ட் நேர்மறை விமர்சனங்களையே பெற்று வருகிறது. 

    விமர்சனங்களை கடந்து, ஏற்கனவே முன்பதிவில் நிகழ்த்திய சாதனையை பீஸ்ட் திரைப்படம் தற்போது வசூலில் நிகழ்த்திவருகிறது. ஆம்! டிக்கெட்டுகள் இல்லா நிலையே தமிழகம் எஙகும் பல திரையரங்குகளில் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. பீஸ்ட் திரைப்படத்தை பொறுத்தமட்டில் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் மிகவும் ஆனந்தத்தில் உள்ளதாகவே தெரிகிறது. 

    இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் தீடிரென தளபதி விஜய் அவர்களின் தந்தையும், தமிழ் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பீஸ்ட் திரைப்படம் குறித்து கூறிய ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் வெளியிட்டுள்ள காணோளியில்,  பாசமுள்ள பிள்ளைகளே என்று பேசியவர், பீஸ்ட் திரைப்படத்திற்கு உங்களைப்போல நானும் ரசிகனாக காத்திருக்கிறேன் என்றும், உங்களுடைய வெற்றிக்கொண்டாட்டத்திற்கு என் வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த காணோளி பதிவை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பீஸ்ட் திரைப்பட வெளியீடு முன்பாகவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    விஜய் அவர்கள் பீஸ்ட் திரைப்படத்திற்காக, சமீபத்தில் அளித்த நேர்காணலில் விஜய் அவர்களிடம் அப்பாவைப்பற்றி சொல்லுங்கள் என்ற சாயலில் கேள்வி கேட்கப்பட்டது. அக்கேள்விக்கு, ‘கடவுளுக்கும், அப்பாக்களுக்கும் ஓரே வித்தியாசம்தான் , கடவுளை நம்மால் பார்க்கமுடியாது, அப்பாக்களை நம்மால் பார்க்கமுடியும்’ என்றிருப்பார். விஜய் இவ்வாறு பேசியது அப்போதே இணையத்தில் வைரலான நிலையில், இன்று விஜய்யின் அப்பா  எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது இன்று வைரலாகி வருகிறது. 

    ஏற்கனவே, பீஸ்ட் திரைப்படம் குறித்த பலவைகள் இணையத்தில் ட்ரெண்டில் இருக்க, எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பேசியதும் இணையத்தில் ட்ரெண்டில் இருப்பதால் தந்தையும் மகனும் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க; பீஸ்ட் எப்படி இருக்கு? மக்கள்,ரசிகர்களின் பார்வையில்…

    பீஸ்ட், கேஜிஎஃப் மோதல்; கள நிலவரங்கள் என்ன? எப்படத்திற்கு பலம் அதிகம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    kalashtra sexual harassment issue

    நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்; பாலியல் தொல்லை காரணமாக கலாஷேத்ரா மாணவர்கள் திட்டவட்டம்!

    சென்னை கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.  சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. மாணவர்கள் சிலர் காணொளி வெளியிட்டு புகார்களை...