Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இரட்டை இலை சின்னத்துக்கு இலஞ்சம் கொடுத்த வழக்கு; சிக்கிக்கொண்டாரா டி.டி.வி.தினகரன் ?

    இரட்டை இலை சின்னத்துக்கு இலஞ்சம் கொடுத்த வழக்கு; சிக்கிக்கொண்டாரா டி.டி.வி.தினகரன் ?

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணையில், கையும் களவுமாக மாட்டிக்கொண்டார் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். 

    இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்ற அதிமுக மற்றும் அமமுக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் அதிமுக கட்சிக்கே இரட்டை இலை சின்னம் சொந்தம் என்று தீர்ப்பு வெளியானது. ஆனால், இந்த தீர்ப்பினை தனக்கு சாதகமாகப் பெற ரூபாய் 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என டி.டி.வி. தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    அவர் டி.டி.வி.தினகரனுடன் பேரம் பேசியதையும், அதற்கு டி.டி.வி.தினகரன் இசைந்து கொடுத்ததையும் விசாரணையில் சுகேஷ் கூற, வழக்கு இன்னும் சூடுபிடித்தது. மேலும், இது தொடர்பான விசாரணைக்கு அமலாக்கத் துறையினரிடம் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்து வருகிறார் டி.டி.வி.தினகரன். இந்த விசாரணையானது டெல்லியில் நடந்து வருகிறது. 

    கிட்டத்தட்ட சுமார் 10 மணிநேரம் நடந்த விசாரணையில் பெரும்பாலான கேள்விகளுக்கு டி.டி.வி.தினகரன் தெரியாது என்றே பதிலளித்து இருக்கிறார். ஆனால், அவர் பதிலளித்த ஒரு சில பதில்களும் பொய் என அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    விசாரணையின் ஆரம்பத்தில் அதிகாரிகள் டி.டி.வி.தினகரனிடம் மிகவும் சாதாரணமாகத்தான் கேள்விகளை கேட்க ஆரம்பித்துள்ளார்கள். ஜெயலலிதாவின் மறைவு, ஆர்.கே.நகர் வெற்றி, உடல்நலம் மாற்று சசிகலா உடனான உறவு இவற்றைப் பற்றி தான் கேள்விகள் எழுந்துள்ளன. டி.டி.வி.தினகரனும் எவ்வித பதற்றமுமின்றி இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 

    இதன்பின்பு தான் இடைத்தரகர் சுகேஷ் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்கு பதிலளித்த டி.டி.வி.தினகரன் தனக்கு சுகேஷ் யாரென்றே தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு அதிகாரிகள் உண்மையை மட்டுமே கூறுமாறும், அவர் சொன்ன பதில் அவருக்கு எதிராகவே மாறலாம் என்றும் எச்சரித்துள்ளனர். ஆனாலும், தனக்கு சுகேஷ் யார் என்றே தெரியாது என்று உறுதியாக மறுத்துள்ளார் டி.டி.வி.தினகரன். 

    அப்பொழுது, அவர் முன்பு சில போட்டோக்களும் , சிசிடிவி காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன. அந்த படங்களில் இடைத்தரகர் சுகேஷும், டி.டி.வி.தினகரனும் ஒன்றாக உட்கார்ந்து உணவு சாப்பிடும் மற்றும் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

    உடனே பதறிப்போன டி.டி.வி.தினகரன், தண்ணீர் குடித்து விட்டு பொறுமையாக பேச ஆரம்பித்துள்ளார். தான் தங்கியிருந்த விடுதியை கண்டறிந்து, சுகேஷ் தான் வந்து சந்தித்தகாகவும், தீர்ப்பு அதிமுகவுக்கு சாதகமாக வர இருப்பதாகவும், அதனால் தனக்கு இருக்கும் செல்வாக்கு மூலம் தீர்ப்பை உங்களுக்கு சாதகமாக மாற்றி தருகிறேன் என என்னிடம் கூறினார் என்று கூறியுள்ளார். மேலும், அதற்கு பணமாக என்னிடம் 50 கோடி வேண்டும் என்று என்னிடம் கூறினார் என்றும் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். 

    இதனையெல்லாம் படபடவென பேசி முடித்த டி.டி.வி.தினகரனுக்கு, குப்பென்று அந்த குளிரூட்டப்பட்ட அறையில் வியர்த்திருந்தது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....