Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அஜித்குமாரின் துணிவு; யூடியூப் தளத்தில் சாதனை புரியும் ‘சில்லா சில்லா’

    அஜித்குமாரின் துணிவு; யூடியூப் தளத்தில் சாதனை புரியும் ‘சில்லா சில்லா’

    துணிவு திரைப்படத்திலிருந்து வெளிவந்த ‘சில்லா சில்லா’ பாடல் யூடியூப் தளத்தில் வெளியாகி பல சாதனைகளை புரிந்து வருகிறது. 

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் ‘துணிவு’ திரைப்படம் மிக வேகமான முறையில் உருவாகி வருகிறது. பொங்கல் வெளியிடாக, துணிவு திரைப்படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திரைப்படம் சார்ந்த புரோமஷன் பணிகளை தற்போது தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

    ‘துணிவு’ திரைப்படம் சார்ந்து சமீபத்தில், இத்திரைப்படத்தின் இயக்குநர் எச்.வினோத் அளித்த போட்டி இணையத்தில் வைரலானது. இதைத்தொடர்ந்து, வெளிவந்த துணிவு திரைப்படத்தின் புகைப்படங்களும் வைரலானது. 

    தற்போது, டப்பிங் பணிகள் எல்லாம் முடிவடைந்து பொங்கலுக்கு திரைக்கு வர காத்திருக்கிறது, துணிவு திரைப்படம். இந்நிலையில்தான், துணிவு திரைப்படத்திலிருந்து நேற்று மாலை ‘சில்லா சில்லா’ எனும் பாடல் வெளியானது. 

    இப்பாடல் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது. சமூகவலைதளங்களில் ‘சில்லா சில்லா’ பாடல் தொடர்ந்து  ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், யூடியூப் தளத்தில் இப்பாடல் சாதனைகளை புரிந்து வருகிறது. தற்போது வரை, 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை இப்பாடல் கடந்துள்ளது. 

    ஜிப்ரான் இசையில் இப்பாடலை அனிரூத் பாட, வைசாக் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

    புரோ கபடி: தோற்ற தமிழ் தலைவாஸ்…எலிமினேட்டரில் உ.பி.யோதாஸுடன் மோதல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....