Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ட்விட்டரை கலக்கும் துணிவு அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்..

    ட்விட்டரை கலக்கும் துணிவு அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்..

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தின் கதாப்பாத்திரங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. 

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் வெளியீடுக்கு ரெடியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். 

    நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அஜித்குமார்- எச்.வினோத் கூட்டணி-போனி கபூர் இணைவதால் துணிவு திரைப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பு என்பது அதிகளவில் உள்ளது. 

    துணிவு திரைப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளிவந்து, மூன்றுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், துணிவு திரைப்படத்தில் உள்ள நடிகர்களின் கதாப்பாத்திரங்கள் பெயர்கள் காலையில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

    அதன்படி, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரத்தின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் மைப்பா. இரண்டாவது அறிமுகம் பக்ஸ். இவர் ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளார். அடுத்த அறிமுகம் நடிகர் பிரேம். இவர் பிரேம் என்ற கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார். தொடர்ந்து அறிமுகம் ஜான் கொக்கன். இவர் க்ரிஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ட்விட்டரில் தொடர்ந்து அப்டேட்டுகள் வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

    மேலும், துணிவு திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை; வெளிவந்த அறிவிப்பு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....