Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதெருநாய் கடிக்கு மனிதர்களே பொறுப்பு - உச்சநீதிமன்றம் அதிரடி

    தெருநாய் கடிக்கு மனிதர்களே பொறுப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி

    கேரள மாநிலத்தில் தெரு நாய் கடித்து, 12 வயது சிறுமி அபிராமி, 18 வயது கல்லூரி மாணவி ஸ்ரீ லெட்சுமி ஆகியோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சிறுவன் நாய் கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது (மே மாதம் 30-ம் தேதி) அன்று கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மங்காரா என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ லெட்சுமி என்ற 18 வயது கல்லூரி மாணவி தெரு நாய் கடித்து உயிரிழந்துள்ளார்.

    அதேபோல் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மயிலபுறம் பகுதியைச் சேர்ந்தவர் 12 வயதான அபிராமி. இவர் கடந்த மாதம் 14-ம் தேதி காலை கடைக்கு பால் வாங்கச் சென்ற போது அங்கிருந்த தெருநாய் ஒன்று அவரை கடித்து, கை, கால், கண், முகம் என ஆறு இடங்களில் அபிராமிக்கு காயம் ஏற்பட்டு பத்தினம் திட்டா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு சிறுமிக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர்-1) அன்று சிறுமி அபிராமி உயிர் இழந்தார்.

    இந்நிலையில் தற்போது மீண்டும் கேரள மாநிலம் அரை கிணறு என்ற பகுதியை சேர்ந்த நூராஸ் என்ற 12 வயது சிறுவன், வீட்டிற்கு வெளியே சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த போது, திடீரென்று வேகமாக ஓடி வந்த தெரு நாய் ஒன்று, சிறுவனை கடித்து குதறியுள்ளது. சிறுவன் தப்பித்து செல்ல முயன்றும் விடாமல் தெரு நாய் தொடர்ந்து கடித்த நிகழ்வு, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    அதுமட்டுமின்றி சிறுவனை நாய் கடித்த அதே நாளில், அப்பகுதியை சேர்ந்த மேலும் 3 பேரையும் நாய் கடித்ததாக கூறப்படுறது. இதில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கேரள அரசு அறிவித்துள்ள தகவலின் அடிப்படையில் 2022 ல் இதுவரை மட்டும் தெருநாய் கடித்து உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆகும் . அவர்களில், பாதிக்கப்பட்ட ஐந்து பேர், கேரள அரசின் வழிகாட்டுதல் படி ரேபிஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்கள். இருந்தும் கேரளாவில் வெறிநாய்க் கடிக்காக போடப்படும் தடுப்பூசிகள் எந்தவித பயனும் இல்லாத ஒன்றாக மாறியுள்ளதால், இச்சம்பவங்கள் குறித்து சமீபகாலமாக கேரளாவில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

    இதனை தொடர்ந்து மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ், ரேபிஸ் தடுப்பூசியின் தரத்தை பரிசோதிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் கேரள உள்ளாட்சித் துறை மந்திரி எம்.பி.ராஜேஷ் மாநிலம் முழுவதும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் அதுகுறித்த உடனடி செயல் திட்டத்தை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என்றும், இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை திங்கள்கிழமை சந்தித்துப் பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், மாநிலம் முழுவதும் 152 தொகுதிகளில் ஏபிசி என்று சொல்லப்படும் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்கள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் தெருநாய்களுக்குத் தொடர்ந்து உணவளித்தால் அவற்றுக்கு உணவு கொடுக்கும் மனிதர்களே, தடுப்பூசி போடுவதற்கும் பொறுப்பேற்க வேண்டும் எனவும், அந்த விலங்குகள் மக்களைத் தாக்கினால் அதற்கான செலவையும் அவர்களே ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளான சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....