Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசி பலன்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வார ராசி பலன்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்: ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஈடுபடுவதன் மூலம் உங்களை நீங்கள் நல்ல முறையில் வளர்த்துக் கொள்வீர்கள். சுய வளர்ச்சியின் மூலம் பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியை மகிழ்ச்சியுடன் விரும்பி செய்வீர்கள். இனிமையான வாரத்தைகளை மென்மையாக பேசி இருவரும் நல்ல புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வீர்கள். ஆரோக்கிய பிரச்சினை ஏதும் இருக்காது. சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

    ரிஷபம்: உங்கள் முயற்சியின் மூலம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.நீங்கள் உங்கள் பணிகளை விரைந்து ஆற்றுவீர்கள்.உங்கள் துணையுடன் நட்பாக இருக்க முயல்வீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் ஏற்படும். பங்கு வர்த்தகம் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். வெளியிடங்களில் உணவு உண்பதை தவிர்க்கவும்.
    அதிக நீரைப் பருகவும்.

    மிதுனம்: இலக்கில் வெற்றி அடைய வேண்டும் என்ற உங்கள் உறுதி உங்களை முன்னேற்றும். விரைந்து முடிவெடுக்கும் மனநிலை உங்களிடம் காணப்படும். உங்கள் பணிகளை மகிழ்ச்சியோடு செய்வீர்கள். சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும்.உங்கள் உணர்ச்சிப் பூர்வமான மனநிலையை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள். இதனால் உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும்.உங்கள் சேமிப்பு உயர வாய்ப்பு உள்ளது. உங்களின் மன உறுதி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.

    கடகம்: உங்கள் செயல்களில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் பணி நிமித்தமான பயணம் காணப்படும். அதன் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு காணப்படும். உங்களின் எதிர் காலத்திற்காக பணத்தை சேமிப்பீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவதன் மூலம் ஒன்றாக செயல்படுவீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

    சிம்மம்: தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் திருப்தி கிடைக்கும். நீங்கள் தன்னம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். பணியில் உங்கள் முன்னேற்றம் அதிக அளவில் இருக்கும். பணத்தை சிறந்த முறையில் கையாள வேண்டும். உங்கள் செலவுகளை கண்காணிக்க வேண்டும். உங்கள் துணையிடம் அமைதியான முறையில் பழக வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

    கன்னி: உங்கள் விருப்பங்கள் நிறைவேற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள நேரும். பணியில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். நட்பான பேச்சின் மூலம் உங்கள் துணையுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முடியும். உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.

    Most Popular