Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகடலூரில் அளவுக்கு அதிகமாக வெடி மருந்து.. வழக்குப் பதிந்த காவல்துறை

    கடலூரில் அளவுக்கு அதிகமாக வெடி மருந்து.. வழக்குப் பதிந்த காவல்துறை

    அளவுக்கு அதிகமாக வெடி மருந்து வைத்திருந்ததாக கடலூரில் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக நாடு முழுவதும் நிகழ்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி பகுதியில் ஏராளமான பட்டாசு கடைகள் மற்றும் வானவெடி கடைகள் உள்ளது. இந்நிலையில், கடலூரில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், குருங்குடி பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் அவரது வீட்டில் வெடி தயாரிப்பதற்காக வெடி மருந்து பொருட்கள் பதிக்கு வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சத்திய தோப்பு சரக்க துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன் குமார் தலைமையில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்தனர்.

    இந்தச் சோதனையில், சிவகாசியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களான பொட்டாசியம் நைட்ரேட் 250 கிலோ, சல்பர் 100 கிலோ மூட்டைகள் 7, அதோடு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வெளி மருந்து பொருட்களை வீட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து, ராஜேந்திரன் வீட்டிலிருந்து வெடி மருந்து மூட்டைகளை காவல்துறை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த வெடி தயாரிக்கும் குடோன் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும், அளவுக்கு அதிகமாக வெடி மருந்து வைத்திருந்த ராஜேந்திரன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....