Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை.. கெத்து காட்டிய பாண்டியா!

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை.. கெத்து காட்டிய பாண்டியா!

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

    நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

    இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பேட்டிங்கில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கை முகமது ரிஸ்வான் – கேப்டன் பாபர் ஆஸம் கூட்டணி களம் கண்டது. இதில் ஆஸம் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் சேர்த்து வெளியேற, தொடர்ந்து வந்த ஃபக்கார் ஜமானும் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    பின்பு, களம் கண்ட இஃப்திகர் அகமது 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்கள் சேர்த்தார். தொடக்கம் முதல் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்த ரிஸ்வான் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். குஷ்தில் 2 ரன்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஆசிஃப் அலி 9, முகமது நவாஸ் 1, ஷாநவாஸ் தஹானி 2 சிக்ஸர்களுடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் ஹாரிஸ் ரௌஃப் 2 பவுண்டரிகளுடன் 13, ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம், பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. 

    இந்திய தரப்பில் பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் 4, ஹார்திக் பாண்டியா 3, அர்ஷ்தீப் சிங் 2, அவேஷ் கான் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கில் களம் கண்டது. 

    ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் விளையாட தொடங்கினர். ஆனால், ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் டக் அவுட்டானார். மறுபுறம், கேப்டன் ரோஹித் சர்மா 1 சிக்ஸருடன் 12 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

    பிறகு களமிறங்கிய விராட் கோலி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 5-ஆவது வீரர் சூர்யகுமார் யாதவ் 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் அடித்தார். இந்நிலையில், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா கூட்டணி அபாரமாக ஆடி அணியை முன்னேற்றியது.

    இதில் ஜடேஜா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். முடிவில் ஹார்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினார். உடன் தினேஷ் கார்த்திக் 1 ரன்னுடன் இருந்தார். பாகிஸ்தான் பௌலிங்கில் முகமது நவாஸ் 3, நசீம் ஷா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

    இந்த ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியா பௌலிங், பேட்டிங் என இரண்டிலும் அசத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். பௌலிங்கில் புவனேஷ்வர் குமாரும், பேட்டிங்கில் ரவீந்திர ஜடேஜாவும் அவருக்குத் துணையாக இருந்தனர். ஹார்திக் பாண்டியாவுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....