Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஆச்சர்யமூட்டும் உலகின் அதிசய இடங்கள்: தெரிந்து கொள்ளுங்கள்!

    ஆச்சர்யமூட்டும் உலகின் அதிசய இடங்கள்: தெரிந்து கொள்ளுங்கள்!

    இயற்கையின் படைப்பில் பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்துள்ளது. உலகில் உள்ள பல இடங்கள், பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. அவற்றில் சில இடங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும்; சில இடங்கள் அழகாய் காட்சி அளிக்கும்; சில இடங்கள் பயமுறுத்தும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் சில மர்மப் பிரதேசங்களை இங்கு காணலாம்.

    எல்லஜ்ட் பொஸ்னியா பிரமிடு மலை

    கடந்த 2005 ஆம் ஆண்டில், Bosnia and Herzegovina என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது தான் எல்லஜ்ட் பொஸ்னியா பிரமிடு மலை. இந்த மலை, எகிப்திய பிரமிடு வடிவம் போல காட்சியளிக்கிறது. இந்த இடத்தை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், 25,000 வருடங்களுக்கு முன்பு இந்த மலை உருவாகி இருக்கலாம் என தெரிவித்தனர்.

    ‌ஸ்டோன்ஹெஞ்

    இங்கிலாந்தின் Wiltshire எனும் இடத்தில் ஸ்டோன்ஹெஞ் அமைந்துள்ளது. இந்த இடம் வரலாற்றுக்கு முந்தைய நினைவுச் சின்னங்களில் ஒன்று. கற்களை அடுக்கி வைத்த வண்ணம் மற்றும் கம்பீரமாய் நிற்கும் இதன் தோற்றம் அனைவராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

    13 அடி உயரமுள்ள கற்களுக்கு மேல், 13 அடி உயரமுள்ள கற்கள் படுக்கையாக காணப்படுகிறது. இந்த கற்கள் சுமார் 25 டன்னுக்கும் மேல் இருக்கலாம். இப்பகுதி கி.மு. 2000 முதல் 3000 வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த கட்டமைப்பானது எப்படி உருவாக்கப்பட்டது என இன்றும் அறிந்துகொள்ள முடியாத மர்மமாக உள்ளது.

    மெக்சிகோ தாஹோஸ் ஹம்

    மெக்சிகோ நாட்டிலுள்ள தாஹோஸ் என்ற கிராமமானது வித்தியாசமான ஒரு சப்தத்தினை வெளியிட்டு வருகிறது. இந்த சப்தம், அப்பகுதியில் அடிவானத்தில் இருந்து வருவதாக சிலர் கூறுகின்றார்கள். தொலைவில் உள்ள ஒரு வாகனத்தின் எஞ்சின் இயங்குவது போல, இந்த சப்தத்தினை உணர்கின்றனர் அப்பகுதி மக்கள். ஒலி அதிர்வெண்களை ஆய்வு செய்யும் பலரால், இப்பகுதியில் ஆய்வு செய்த பிறகும், இந்த சப்தத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய முடியவில்லை.

    நஸ்கா மர்ம கோடுகள்

    தென் அமெரிக்காவின் பெரு நாட்டிலுள்ள நஸ்கா என்ற இடத்தில், மிகப்பெரிய நிலப்பரப்பில் வரையப்பட்டிருக்கும் கோடுகள் தான் நஸ்கா மர்ம கோடுகள். இந்த இடத்திலிருந்து சுற்றளவில் சில கிலோமீட்டர்கள் தொலைவிற்கு, மனித குடியேற்றங்கள் ஏதும் இல்லை.

    உலகின் அதிக மர்மங்கள் நிறைந்த இடங்களில் முதன்மையானதாகப் பார்க்கப்படுவது இந்த நஸ்கா கோடுகளைத் தான். இவை, 6 ஆம் நூற்றாண்டின் காலப்பகுதிகளில் வசித்த நசுகா நாகரிக மக்களால் வரையப்பட்டது என நம்படுகிறது‌. ஏன் இந்த கோடுகள் வரையப்பட்டது என இன்றளவும் உறுதியாக சொல்லப்படவில்லை. 500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் உள்ள இந்த ஓவியங்கள் மற்றும் கோடுகளை விமானதில் இருந்து மட்டுமே முழுதாக பார்க்க முடியும்.

    பெருவயிறு மலை அல்லது பானைவயிறு

    உலகில் கண்டுபிடிக்கப்பட்ட வழிபாட்டுத் தளங்களில், மிகப் பழமையானதாக கருதப்படுவது, Gobekli Tepe எனப்படும் பெருவயிறு மலை. இது துருக்கி நாட்டிலுள்ள சான்லியூர்பா மாகாணத்தில் அமைந்துள்ளது.

    இதனை துருக்கியில் “Potbelly Hill”, அதாவது பானைவயிறு மலை என அழைக்கிறார்கள். இது சுமார் கி.மு. 8000 என்ற காலகட்டமாக இருக்கலாம் என ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. தொழிநுட்பம் இல்லாத அந்த காலத்தில், இப்படி ஒரு0படைப்பு எப்படி சாத்தியம் என பல விஞ்ஞான ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல ஆய்வுகளுக்குப் பின்னும் இந்த வழிபாட்டுத்தலம் உருவாக்கப்பட்ட தொழிநுட்ப மர்மம், இன்னமும் அறியப்படாத ஒன்றாகவே கருதப்படுகிறது.

    கொரோனா ஓய்ந்தது ; வெள்ளம் வந்தது – தொடர் இன்னல்களில் மக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....