Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஒரு நாய் - ரூ.20 கோடி ; விலைக்கு வாங்கிய பெங்களூரு தொழிலதிபர்

    ஒரு நாய் – ரூ.20 கோடி ; விலைக்கு வாங்கிய பெங்களூரு தொழிலதிபர்

    கர்நாடகம் மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஒரு நாயை ரூ.20 கோடிக்கு வாங்கியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    உலகம் முழுவதும் செல்லப் பிராணிகளை வளர்க்க ஆர்வம் காட்டும் மக்கள் அதிகளவில் இருக்கின்றனர். நாய், பூனை அதிகளவில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளாக உள்ளன. ‘பிராணிகள்’ என்று நாம் கூறினாலும், அவைகளை தங்களது குடும்பத்தில் ஒருத்தராக பாவிக்கும் குணம் என்பது பலரிடத்தில் உள்ளது. 

    தங்களது செல்லப் பிராணிகளுக்காக அதன் உரிமையாளர்கள் செய்யும் வியக்க கூடிய செயல்கள் உலகம் முழுவதும் அதிகளவில் உள்ளன. அந்த வகையில், கர்நாடகம் மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் “காகேசியன் ஷெப்பர்டு” நாயை ரூ.20 கோடிக்கு வாங்கியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரும், பெங்களூருவில் உள்ள கட போம்ஸ் கென்னல்ஸ் என்ற நாய் விற்பனை கடை வைத்திருப்பவர் சதீஷ். இவர் ஹைதராபாத்தில் உள்ள நாய் விற்பனையாளரிடம் இருந்து “காகேசியன் ஷெப்பர்டு” இன நாயை ரூ.20 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். 

    ஒன்றைரை வயதாகும் அந்த நாய்க்கு ‘கடபோம் ஹைடர்’ என சதீஷ் பெயர் சூட்டியுள்ளார். சதீஷின் இந்த செயல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இது குறித்து சதீஷ் கூறுகையில், ‘திருவனந்தபுரத்தில் நடந்த நாய் கண்காட்சியில் ‘கடபோம் ஹைடர்’ கலந்துகொண்டு 32 பதக்கங்களை வென்றுள்ளது. கடபோம் ஹைடர் தற்போது அனைவருடனும் பாசத்துடன் பழகி வருகிறது. இதற்கு தற்போது எனது வீட்டில் தனியாக குளிரூட்டப்பட்ட அறை ஒதுக்கியுள்ளேன்.’ என்று தெரிவித்துள்ளார். 

     

    View this post on Instagram

     

    A post shared by S Sathish (@satishcadaboms)

    காகேசியின் ஷெப்பர்டு இன நாய் இந்தியாவில் காணப்படுவது மிகவும் அரிதாகும். பொதுவாக இந்த இன நாய்கள் துருக்கி, சிர்கசியா, ஜார்ஜியா, அஜர்பைஜான், ஒசேஷியா, தாகெஸ்தான் போன்ற நாடுகளில் அதிகளவில் காணப்படுகின்றன. 

    190 நாடுகள்ல இருந்து தென்-கொரியா மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்… காரணம் என்ன தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....