Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘தமிழ்நாடு’ ஹாஷ்டாக்

    ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘தமிழ்நாடு’ ஹாஷ்டாக்

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ‘தமிழ்நாடு’ என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

    சென்னை கிண்டியில் நேற்று காசி தமிழ் சங்கமம் ஏற்பாட்டாளர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை இருப்பதாகவும் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருப்பதாகவும் கூறினார். மேலும் இது ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய ஆளுநர், இந்தியா என்பது ஒரே நாடு என்றும் ‘தமிழ்நாடு’ என்று சொல்வதை விட ‘தமிழகம்’ என்று சொல்வதே சரியாக இருக்கும் என்றும் கூறினார். 

    இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ட்விட்டர் பக்கத்தில் ‘தமிழ்நாடு’ என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் இந்திய அளவில் முதல் இடத்திலும் இருந்து வருகிறது. 

    தமிழ்நாடு ஹாஷ்டாக் பயன்படுத்தி பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதில் ஆளுநருக்கு எதிரான கருத்துகள் வருவது குறிப்பிடத்தக்கது. 

    190 நாடுகள்ல இருந்து தென்-கொரியா மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்… காரணம் என்ன தெரியுமா? 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....