Sunday, March 17, 2024
மேலும்
    Homeஆன்மிகம்418 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவட்டார் கோயில் குடமுழுக்கு

    418 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவட்டார் கோயில் குடமுழுக்கு

    418 ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் குடமுழுக்கு இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருவெட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 108 வைணவ திருத்தளங்களில் ஒன்றாக உள்ளது. வெளிநாட்டு அரசர்களும், திருவேலாங்கனூர் அரசர்களும் இக்கோயிலில் கட்டுமானப்பணிகளை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இக்கோயிலின் தூண்களில் ராமாயணம், மகாபாரதம் மற்றும் பிற புராணங்களை தொடர்பான 2300-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாதன் சுவாமி கோயில் போன்று திருவெட்டாறு ஆதிகேசவன் பெருமாள் கோயிலின் வடிவமைப்பும் அமைந்துள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த பெருமாள் கோவிலில், கடந்த 1604-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு குடமுழுக்கு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சுமார் 418 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் கோபுரகலசத்தைக் கண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர்.

    கோயில் குடமுழுக்கு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கின. குடமுழுக்கு தினமான இன்று அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், பிரசாத பிரதிஷ்டை, சுபமுகூர்த்தத்தில் பிரதிஷ்டை, சித்பிம்ப சம்மேளனம், உச்சபூஜை, பிரதிஷ்டை தக்‌ஷிணை நஸ்காரம், உப தேவன்மாருக்கு பிரதிஷ்டை நடைபெற்றது. காலை 5.10 மணி முதல் 5.50 மணி வரை பிரதிஷ்டை, ஜீவகலச அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணி முதல் 6.50 மணிக்குள் அஷ்டபந்தன மஹா குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது.

    கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டதும் பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… என பக்தி கோஷம் எழுப்பினர். கலசங்களில் இருந்த புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    குடமுழுக்கு விழாவை காண வந்த பக்தர்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு நின்றனர். பக்தர்கள் குடமுழுக்கை கண்டுகளிக்கும் வகையில் திருவட்டாரில் ஆங்காங்கே அகன்ற திரை டி.வி. வைக்கப்பட்டு, குடமுழுக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

    குடமுழுக்கின் போது மழை பெய்தாலும், பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் பக்தி கோஷம் எழுப்பினர். குடமுழுக்கு விழாவை காண வந்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று பெருமாளை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இதற்காக கோயிலில் கம்புகள் மூலம் குறிப்பிட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஒவ்வொரு தடுப்பு பகுதியிலும் பக்தர்கள் நிறுத்தப்பட்டு அடுத்த பகுதிக்கு அனுப்பப்பட்டனர். இதனால் பக்தர்கள் சிரமமின்றி ஆதிகேசவ பெருமாளை தரிசித்துச் சென்றனர்.

    குடமுழுக்கு விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், விஜய்வசந்த் எம்.பி., கலெக்டர் அரவிந்த், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் திரளாக பங்கேற்றனர். இதற்காக 500 போலீசார் அடங்கிய பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இன்று மாலை 6 மணிக்கு கோயிலில் லட்சதீபம் நடக்கிறது. தொடர்ந்து 9-ம் தேதி வரை காலை-மாலை வேளைகளில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    நாயன்மார்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் – பாகம் 2

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....