Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திரையரங்குகளில் கவர்தலை நிகழ்த்திய திருச்சிற்றம்பலம் இப்போது ஓடிடியில்.....

    திரையரங்குகளில் கவர்தலை நிகழ்த்திய திருச்சிற்றம்பலம் இப்போது ஓடிடியில்…..

    நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ளது. 

    நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்தான், திருச்சிற்றம்பலம். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யாரடி நீ மோகனி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்கு பிறகு மித்ரன் ஜவகர் 4-வது முறையாக நடிகர் தனுஷை திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் இயக்கியுள்ளார். மேலும், நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் இணை நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைந்துள்ளது. 

    திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவாணி சங்கர் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மிகவும் எளிமையாக அதே சமயம் கமர்ஷியல் திரைப்படம் என்று கூறத் தேவையான அத்தனை குணநலன்களையும் தன்னுள் வைத்துள்ளது, திருச்சிற்றம்பலம். 

    இந்நிலையில், திருச்சிற்றம்பலம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஓடிடி தளமான சன் நெக்ஸ்ட் ஆப்பில் திருச்சிற்றம்பலம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட்….ஒரு மில்லியன் பார்வையாளர்களா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....