Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட்....ஒரு மில்லியன் பார்வையாளர்களா?

    சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட்….ஒரு மில்லியன் பார்வையாளர்களா?

    நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படத்தில் இருந்து ஜெஸ்ஸிகா எனும் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

    இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான், ‘பிரின்ஸ்’.  தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.

    மேலும், இத்திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

    ஏற்கனவே ,பிரின்ஸ் திரைப்படத்தின் பிம்பிலாக்கி பிலாப்பி பாடல் வெளிவந்து, ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிலையில், தற்போது அதே திரைப்படத்தில் இருந்து ஜெஸ்ஸிகா எனும் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

    பாடலாசிரியர் அறிவு வரியில், இசையமைப்பாளர் தமன் குரலில் யூடியூப் தளத்தில் வெளிவந்துள்ள ஜெஸ்ஸிகா பாடல் இதுவரையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்….ரன்னிங் டைம் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....