Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லையில் மர்ம காய்ச்சலால் 2 வயது சிறுமி உயிரிழப்பு

    நெல்லையில் மர்ம காய்ச்சலால் 2 வயது சிறுமி உயிரிழப்பு

    திருநெல்வேலியில் மர்ம காய்ச்சலால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    தமிழகத்தில் ஃப்ளு காய்ச்சல் எனப்படும் எச்1 என்1 இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் காய்ச்சல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக இந்தக் காய்ச்சல் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. 

    இதனிடையே, நெல்லை மாவட்டம், பத்தமடை பகுதியில், மர்ம காய்ச்சலால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    பத்தமடை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான இசக்கிமுத்துவின் மகள் பிரதிக்சா(வயது 2). இந்தக் குழந்தைக்கு கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் குறையாத காரணத்தால் பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

    இதைத்தொடர்ந்து, குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 2 வயதான பிரதிக்சா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    மர்மமான முறையில் சிறுமி உயிரிழந்த காரணத்தால், இதுகுறித்து பத்தமடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது, ஆனால் இயற்கையை நம்மால் காக்க முடியும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....