Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு...வழியில் சிக்கிய 400 பக்தர்கள்...

    உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு…வழியில் சிக்கிய 400 பக்தர்கள்…

    உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ராஜஸ்தானைச் சேர்ந்த 400 பக்தர்கள் தங்களது மாநிலத்திற்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

    உத்தரகண்ட் மாநிலத்தில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தர்காசிக்கு அருகே கப்னானி என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ராஜஸ்தானைச் சேர்ந்த 400 பயணிகள் தங்களது மாநிலத்திற்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

    இவர்கள் உத்தர்காசி சென்றுவிட்டு தங்களது மாநிலத்திற்கு திரும்புகையில்தான் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ராஜஸ்தானைச் சேர்ந்த பயணிகள் தங்களது பயணத்தை தொடங்க முடியாமல் இடையில் சிக்கிக் கொண்டனர்.

    மேலும், ஏற்பட்ட நிலச்சரிவினால் பயணிகள் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியிருப்பதாவது: “பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு மற்றும் பிற வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளன.” என்றனர்.

    இதையும் படிங்க: இப்படியும் சில பெண்கள்? முன்னாள் காதலியை கணவனுக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மனைவி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....