Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் நிலை என்ன? மத்திய அரசு சொன்ன பதில்!

    உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் நிலை என்ன? மத்திய அரசு சொன்ன பதில்!

    உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு உதவும் வகையில், பிரத்யேக வலைதளம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக பல்வேறு படிப்புகளை பயின்று வந்த இந்திய மாணவர்கள் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர் . மாணவர்கள் உயிர்தப்பினாலும் அவர்களின் கல்விநிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது .

    மேலும், மாணவர்களின் கல்விக் கனவு என்ன ஆவது என்ற கேள்விகள் அப்போது இருந்தே எழுப்பப்பட்டு வந்தது. மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து வந்தனர். இந்தியாவில் படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் வந்தனர். 

    இந்நிலையில், இந்திய பல்கலைகழகத்தில் தொடர வழிவகை செய்யும் முறைக்கு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் இடமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டப்படி வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: கனடாவில் அதிகரிக்கும் இனவாத தாக்குதல்; இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு

    மேலும், மாணவர்களுக்கு தளர்வு செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவப் படிப்பின் தரத்தினை பாதிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்தது. இதனால், மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.

    இதையடுத்து, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி, உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு உதவும் வகையில், அவர்கள் படிப்பை நிறைவு செய்யக் கூடிய இதர வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள், கட்டணம் தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய வலைதளத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.

    இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷூ தூலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று (செப்டம்பர் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ‘ வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் குறித்த வலைதளத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பரிந்துரைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 11-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....