Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா?

    இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா?

    இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான கனா திரைப்படத்தின் மூலம் அருண்ராஜா காமராஜ் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். 

    இந்தக் ‘கனா’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். 

    இந்நிலையில், கடந்த மே மாதம் அவரும் அவரது மனைவியான சிந்துஜாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

    இதையடுத்து, இவரது மனைவி சிந்துஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக அவர், மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தார். 

    இதனிடையே, அருண்ராஜா கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அந்தப் பெண் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

    இதுகுறித்து, அருண்ராஜா விரைவில் பொதுவாக சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    இதையும் படிங்க‘க.நெடுஞ்செழியன்‌ அவர்களின்‌ புகழ்‌ வாழ்க!’ – உருகிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....