Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'க.நெடுஞ்செழியன்‌ அவர்களின்‌ புகழ்‌ வாழ்க!' - உருகிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    ‘க.நெடுஞ்செழியன்‌ அவர்களின்‌ புகழ்‌ வாழ்க!’ – உருகிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்மொழி அறிஞர், பேராசிரியர் – முனைவர் க.நெடுஞ்செழியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். 

    திருச்சி தந்தை பெரியார் அரசுக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகவும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராகவும் பணியாற்றியவர், க.நெடுஞ்செழியன். இவர் 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். 

    பல்வேறு விருதுகளை வென்ற இவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாள்களாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், இன்று காலை உயிரிழந்தார்.  இவரின் இறப்புக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் க.நெடுஞ்செழியன் மறைவு குறித்து இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது;

    தமிழ்மொழி அறிஞரும்‌ தமிழின அரிமாவுமான பேராசிரியர்‌ – முனைவர்‌ க.நெடுஞ்செழியன்‌ அவர்கள்‌ மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன்‌. கடந்த ஆகஸ்ட்‌ மாதம்தான்‌ அவருக்குக்‌ ‘கலைஞர்‌ மு.கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருதை’ நான்‌ வழங்கினேன்‌. சக்கர நாற்காலியில்‌ வந்து அவர்‌ அந்த விருதைப்‌ பெற்றுக்‌ கொண்டார்கள்‌.

    இதையும் படிங்க: தில்லி காற்று மாசுபாடு எதிரொலி; தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை

    அப்போது உரையாற்றிய நான்‌, “2021- ஆம்‌ ஆண்டுக்கான கலைஞர்‌ மு.கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெறும்‌ பேராசிரியர்‌ நெடுஞ்செழியன்‌ அவர்களின்‌ அறிவுத்‌ திறத்தைச்‌ சொல்வதாக இருந்தால்‌ பல மணி நேரம்‌ ஆகும்‌. முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களும்‌ – இனமானப்‌ பேராசிரியர்‌ அவர்களும்‌ இன்று இருந்திருந்தால்‌ முனைவர்‌ க.நெடுஞ்செழியன்‌ அவர்களுக்கு விருது வழங்கும்‌ காட்சியைக்‌ கண்டு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்‌.

    தமிழுக்கும்‌ தமிழினத்துக்கும்‌ திராவிட இயக்கத்துக்கும்‌ தொண்டாற்றுவதற்காகத்‌ தனது வாழ்நாளை ஒப்படைத்துக்‌ கொண்டவர்தான்‌ பேராசிரியர்‌ நெடுஞ்செழியன்‌ அவர்கள்‌. பல்வேறு நூல்களைப்‌ படைத்தவர்‌. தந்‌தை பெரியார்‌ குறித்தும்‌, திராவிட இயக்கம்‌ பற்றியும்‌ தொடர்ந்து எழுதி வருபவர்‌ பேராசிரியர்‌. எழுதுபவர்‌ மட்டுமல்ல, இன உரிமைப்‌ போராளி அவர்‌. அவருக்கு இந்த விருது தரப்பட்டது பெருமைக்குரியது ஆகும்‌” என்று நான்‌ குறிப்பிட்டேன்‌. அத்தகைய படைப்பாளியாகவும்‌ போராளியாகவும்‌ இருந்தவரைத்தான்‌ இழந்துள்ளோம்‌.

    இந்தியப்‌ பண்பாட்டில்‌ தமிழும்‌ தமிழகமும்‌, தமிழ்‌ இலக்கியத்தில்‌ உலகாயதம்‌, உலகத்தோற்றமும்‌ தமிழர்‌ கோட்பாடும்‌, தமிழர்‌ தருக்கவியல்‌, தமிழரின்‌ அடையாளங்கள்‌, சங்க காலத்‌ தமிழர்‌ சமயம்‌, சமூகநீதி, இந்திய சமூகப்‌ புரட்சியில்‌ திராவிட இயக்கத்தின்‌ கொடை, பேரறிஞர்‌ அண்ணாவும்‌ பெருங்கவிஞர்‌ குமாரன்‌ ஆசானும்‌, பக்தி இயக்கங்களும்‌ வைதீக எதிர்ப்பும்‌ ஆகிய அவரது நூல்கள்‌ தமிழுக்கு மிகப்பெரிய கொடையாகும்‌.

    ‘ஆசீவகமும்‌ ஐயனார்‌ வரலாறும்‌’ என்ற அவரது நூலை ‘அன்பகத்தில்‌’ வெளியிட்டு உரையாற்றும்‌ வாய்ப்பை அவர்‌ எனக்கு வழங்கினார்கள்‌. அவர்‌ உடல்நலிவுற்ற செய்தி அறிந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்‌ தங்கி நலம்‌ பெற ஏற்பாடுகளைச்‌ செய்தோம்‌. அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌ அவர்களும்‌ அவரைச்‌ சென்று பார்த்து நலம்‌ அறிந்து வந்தார்‌. நலம்‌ பெற்றுத்‌ திரும்பி தனது அறிவுலகச்‌ செயல்களைத்‌ தொடர்வார்‌ என்று பெரிதும்‌ நம்பினேன்‌. ஆயினும்‌, அவரது உடல்‌ அதற்கு ஒத்துழைக்காத நிலையில்‌ மறைந்து விட்டார்‌.

    இதையும் படிங்க: 200 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் செல்லாத அதிசய கோயில்; ஆண்களுக்கு மட்டுமே அனுமதி.. ஏன் தெரியுமா?

    அவரது அறிவு நூல்கள்‌ தமிழ்ச்‌ சமுதாயத்தை எந்நாளும்‌ உணர்ச்சியூட்ட உதவவே செய்யும்‌. க.நெடுஞ்செழியன்‌ அவர்களின்‌ புகழ்‌ வாழ்க! அவரை இழந்து வாடும்‌ அவர்தம்‌ குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....