Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்மதுரை மாநகராட்சியின் அவலம்: துணியை கட்டி மழை தண்ணீரை அகற்றிய ஊழியர்கள்!

    மதுரை மாநகராட்சியின் அவலம்: துணியை கட்டி மழை தண்ணீரை அகற்றிய ஊழியர்கள்!

    மதுரை மாநகராட்சி ஊழியர்கள் வினோத முறையில் பெரிய துணிகளை கொண்டு பெரியார் பேருந்து நிலையத்தில் தண்ணீர் அகற்றி அசத்தியுள்ளனர்.

    வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மலை பெய்து வருகிறது.

    இதற்கிடையில் மதுரையில் பெய்த பலத்த மலையின் காரணமாக பெரியார் பேருந்து நிலையத்தில் குண்டு குழிகளிலும் பள்ளிகளிலும் நீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    மதுரை மாநகராட்சி பெரியார் பேருந்து நிலையத்தில் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலையில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு போதுமான இயந்திரம் இல்லாத காரணத்தினால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

    இதனால் மாநகராட்சியில் போதுமான இயந்திரம் இல்லை என்பதை உறுதி படுத்தும் வகையில்,குண்டு குழிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் மிகவும் லாபகமா பெரிய துணிகளை கொண்டும் தண்ணீரை அகற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை பார்க்கும் போது வியப்பாக இருந்தாலும் மக்கள் எந்த அளவிற்கு சிரமப்படுகிறார்கள் என்பதை இந்த நிகழ்வு தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

    இதனால் இனி வரும் காலம் மழை காலம் எனபதால் மதுரை மாநகராட்சி இதை கருத்தில் கொண்டு அதற்க்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் இல்லையேல் மக்கள் மிகவும் சிரமத்திற்க்கு உள்ளாவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை; அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....