Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபட்ஜெட் கூட்டத்தின் இரண்டாம் அமர்வுக்காக பாராளுமன்றம் தொடங்கியது : ஜி.எஸ்.டி வரி உயருமா ?

    பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாம் அமர்வுக்காக பாராளுமன்றம் தொடங்கியது : ஜி.எஸ்.டி வரி உயருமா ?

    ஐந்து மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியது. நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மணிப்பூர், உத்திரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளே நுழையும் போது மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் பாஜக எம்பிக்கள் எழுந்து நின்று மேசைகளைத் தட்டியும் “மோடி, மோடி” என்று முழங்கியும் வரவேற்பு கொடுத்தனர். 

    Narendra Modi

    பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி வரியினால் இழப்பீடு பெறும் மாநிலங்களைப் பற்றி பேசினார். ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியானது கடந்த 2017ஆம் வருடம் ஜூலை 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதனை அறிமுகப்படுத்திய போது புதிய வரி வசூலிக்கும் முறைக்கு மாறுவதால் சில மாநிலங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவது என முடிவு செய்து வழங்கப்பட்டும் வந்தது. அதற்கான முடிவு காலம் வரும் ஜூன் மாதம் ஆகும். ஆனால், கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இன்னும் வரிவசூலிப்பதில் சிக்கல் உள்ளதால், இழப்பீட்டுக் காலத்தை உயர்த்தக்கோரி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

    Nirmala Seetharaman

    ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது பேசிய மத்திய நீர்நிலைகள் துறை இணையமைச்சர் பிஷ்வேஸ்வர் தூடு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவிலான நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உள்ளன என்று தெரிவித்தார். இந்தியாவில் மட்டும் மொத்தம் 9.45 லட்சம் நீர்நிலைகள் உள்ளன. இதில் 18 ஆயிரத்து 691 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 8366 நீர்நிலைகளும், ஆந்திராவில் 3920 நீர்நிலைகளும், தெலுங்கானாவில் 3032 நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பில் உள்ளன.

    Venkaiah Naidu

    மேலும், உலக மக்களின் இயல்பு வாழ்க்கையையே தலைகீழாக திருப்பிப்  போட்ட கொரோனா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நோய்த்தொற்றைத் தடுக்கும் தடுப்பூசிகளும் அனைவருக்கும் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸைக் கொள்ளும் சக்தி கொண்ட சி-பேண்டு இயந்திரம் பொருத்தப்பட்டு உள்ளதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். இந்த இயந்திரம் புற ஊதாக்கதிர்களை அதிகமாக வெளியிடுவதால் கொரோனா வைரஸானது கொள்ளப்படுகிறது என தகவல் கிடைத்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....