Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஎங்கேயும் காதல்.. மனநல காப்பகத்திலும் மலரும் காதல்.. அமைச்சர் தலைமையில் கோலாகல திருமணம்

    எங்கேயும் காதல்.. மனநல காப்பகத்திலும் மலரும் காதல்.. அமைச்சர் தலைமையில் கோலாகல திருமணம்

    சென்னையில் உள்ள மனநல காப்பகம் ஒன்றில்  இருவரிடையே காதல் ஏற்பட்டு தற்போது கல்யாணத்தில் முடிந்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    சென்னையைச் சேர்ந்தவர் மகேந்திரன் என்பவர், இவருக்கு வயது 42. குடும்ப பிரச்சனை காரணமாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டார். இவரைப் போலவே வேலூரைச் சேர்ந்த தீபா என்ற பெண் (வயது 36) தந்தை இறந்த சோகத்தால் மன அழுத்தம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டார்.

    இதையும் படிங்க: திருமண வீட்டில் ரசகுல்லாவிற்காக பறிபோன உயிர்.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா? 

    இவர்கள் இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

    இவர்கள் இருவருக்கும் மனநலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டத்தை தொடர்ந்து, காப்பகத்திலேயே தங்கி பணியாற்றி வருகின்றனர். பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 

    இதையடுத்து இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, காப்பக இயக்குனர் பூர்ண சந்திரிகாவிடம் தெரிவித்துள்ளனர். இவர்களின் திருமணத்தை முன்னின்று நடத்த காப்பாக நிர்வாகமும் முன்வந்தது. இவர்களின் திருமணத்திற்காக பல்வேறு தரப்புகளில் இருந்து நிதி திரட்டப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், இன்று காலை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் நுழைவு வாயில் எதிரே உள்ள சித்தி புத்தி விநாயகர் கோயிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்து கொடுக்க திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

    இதையும் படிங்க: இந்தியாவில் இன்று புதிதாக 2,208 பேருக்கு கொரோனா தொற்று…!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....