Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்சவரனுக்கு 760 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை: மகிழ்ச்சி வெள்ளத்தில் இல்லத்தரசிகள்! 

    சவரனுக்கு 760 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை: மகிழ்ச்சி வெள்ளத்தில் இல்லத்தரசிகள்! 

    கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமே இருந்து வந்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையில் அதிரடியான மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்துள்ளது.
    கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அடுத்த நாளே, தங்கத்தின் விலை ரூ. 160 அதிகரித்து, ஒரு சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தங்கத்தின் விலையானது ஏற்ற, இறக்கத்துடனே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று (ஜூன் 14) தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.
    சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 95 அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 4,740-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு ரூ. 760 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 37,920-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்ததையடுத்து, இன்று தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. நேற்று ரூ. 5,234-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம், இன்று ரூ. 5,139-க்கு விற்பனையாகிறது. அதேபோல, நேற்று ரூ. 41,872-க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம், 760 ரூபாய் குறைந்து ரூ. 41,112-க்கு விற்பனையாகிறது.
    இந்த நிலையில், ஒரு கிலோ வெள்ளியின் விலையில் ரூ. 1300 குறைந்துள்ளது. சென்னையில், ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ. 67.30 ஆக இருந்தது. ஆனால், இன்று 66 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 66,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை பெங்களூருவில் ரூ. 4,836 ஆகவும், மும்பையில் ரூ. 4,836 ஆகவும், டெல்லியில் ரூ.4,836 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ. 4,836 ஆகவும், கேரளாவில் ரூ. 4,839 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,836 ஆகவும், ஒசூரில் ரூ.4,837 ஆகவும் மற்றும் பாண்டிச்சேரியில் ரூ.4,837 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னையில் கடந்த ஒரு மாத காலமாகவே தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் உள்ளது. தங்கத்தின் விலை ஒரு நாள் குறைந்தால் அடுத்த நாளே உயர்ந்து விடுகிறது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், நாளை அதிகரிக்குமோ என்கிற பயத்தில் நகைப் பிரியர்கள் உள்ளனர். இருப்பினும், விலை அதிகரிப்பதற்குள் இன்றே தங்க நகை வாங்கி விட்டால் நல்லது தானே.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....