Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவானில் பறந்த போதே தீப்பிடித்த டெல்லி விமானம்! அலறிய பயணிகள் - தீயாய் பரவிய வீடியோ

    வானில் பறந்த போதே தீப்பிடித்த டெல்லி விமானம்! அலறிய பயணிகள் – தீயாய் பரவிய வீடியோ

    டெல்லியிலிருந்து விமானம் டேக் ஆஃப் செய்யவிருந்த நேரத்தில் விமானத்தின் என்ஜினில் தீ பிடித்தது.

    நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையமானது எப்போதுமே பரபரப்பாக இருக்கும். உள்நாட்டு விமானங்கள் மற்றும் சர்வதேச விமானங்கள் டெல்லியில் இயக்கப்பட்டு வருகின்றன. 

    இந்நிலையில், டெல்லியில் இருந்து, பெங்களூருவுக்கு 184 பயணிகளுடன் இண்டிகோ விமான நிறுவனத்தின் 6E-2131 விமானம் நேற்று இரவு 9.45 மணியளவில் கிளம்புவதற்காக தயராகியது. கிட்டத்தட்ட விமானம் டேக் ஆஃப் செய்ய ஆரம்பித்த  நேரத்தில் விமானத்தின் என்ஜினில் தீ பிடித்தது. 

    இதனால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றமும், அச்சமும் ஏற்பட்டது. தீ சிறிது வினாடிகளில் அணைந்துவிட்டது. இதன்பிறகு பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, மாற்று விமானத்தின் மூலம் அவரவர்களின் இலக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. 

    இதையும் படிங்க: உள்துறை அமைச்சர்கள் மாநாடு: ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை; பிரதமர் மோடி புதிய யோசனை

    இச்சம்பவம் குறித்து இண்டிகோ நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது; 

    டெல்லியில் இருந்து பெங்களூருவிற்கு இயக்கப்படும் விமானம் (6E2131) டேக் ஆப் செய்யும் நேரத்தில் என்ஜின் பழுதடைந்தது இதனால் டேக் ஆப் செய்வது நிறுத்தப்பட்டது. விமானம் பத்திரமாக பார்க்கிங் பே பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அனைத்து பயணிகளும் பத்திரமாக மாற்று விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக நாங்கள் வருந்துகிறோம். 

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     இச்சம்பவம் குறித்த காணொளியானது சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: ‘மனைவி வந்த நேரம் நல்ல நேரம்’ – ஹரிஷ் கல்யாணுக்கு கிடைத்த ஜாக்பாட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....