Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கரின் சுவரொட்டியை அச்சடித்த நபர் கைது

    சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கரின் சுவரொட்டியை அச்சடித்த நபர் கைது

    சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கரின் சுவரொட்டியை அச்சடித்த கும்பகோணம் உப்புகாரத் தெருவைச் சேர்ந்தவரும், அச்சகம் நடத்தி வருபவருமான மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் அபேத்கர் உருவ சிலை மற்றும் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

    இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில், அம்பேத்கர் உருவ படத்தில் காவை உடை அணிவித்து விபூதி பூசி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த போஸ்டரில் “காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம்” என எழுதி இருந்தது. 

    காவி உடை, விபூதி, குங்குமம் வைக்கப்பட்ட அம்பேத்கர் உருப்பட போஸ்டர் கும்பகோணத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

    இதைத்தொடர்ந்து, அம்பேத்கர் உருவப்படத்திற்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைக்கப்பட்டு போஸ்டர் அடிக்கப்பட்டது தொடர்பாக கும்பகோணத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தியை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்து கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்தனர். 

    இந்நிலையில் நேற்று சுவரொட்டியை அச்சடித்த கும்பகோணம் உப்புகாரத் தெருவைச் சேர்ந்தவரும் அச்சகம் நடத்தி வருபவருமான மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய கணினி மற்றும் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது ஐபிசி 153(ஏ), 295(ஏ), 504, 505 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி 5 சுவைகளில் கேக் தயாரிக்க ஆவின் திட்டம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....