Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநடுரோட்டில் பார்ட் பார்ட்டாக கழண்ட எலக்ட்ரிக் பைக்; வைரலாகும் பதிவு!

    நடுரோட்டில் பார்ட் பார்ட்டாக கழண்ட எலக்ட்ரிக் பைக்; வைரலாகும் பதிவு!

    பெங்களூரில் நடுரோட்டில் ஓலா பைக்கின் முன்பகுதி பார்ட் பார்ட்டாக ரோட்டில் கழண்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகரித்து வருவதால் மக்கள் பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரிக் பைக்குகள் பக்கம் திரும்பி வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு எலக்ட்ரிக் பைக்குகள் தேவை அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

    அதேநேரம், எலக்ட்ரிக் பைக்குகளை பயன்படுத்துவதில் பெரும்பாலான மக்கள் தயக்கம் காட்டவும் செய்கின்றனர். இதற்கு காரணமாக எலக்ட்ரிக் பைக்குகளில் ஏற்படும் பிரச்னைகள் கூறப்படுகிறது. 

    இந்நிலையில், எலக்ட்ரிக் பைக்குகள் மீதான மக்களின் தயக்கத்தை அதிகரிக்கும் வகையிலான நிகழ்வு ஒன்று தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் Ola S1 Pro ரக எலக்ட்ரிக் பைக்குகளில் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். 

    அப்படியாக, கடந்த நவம்பர் மாதம் அவர் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருதற்காக சென்றுள்ளார். அப்படி அழைத்து வருகையில், திடீரென நடுரோட்டில் பைக்கின் முன்பகுதி பார்ட் பார்ட்டாக ரோட்டில் கழண்டு விழுந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார். 

     இதைத்தொடர்ந்து, அந்த நபர் ஓலா நிறுவனத்திடம் புகார் அளித்தார். பின்பு, அந்த பைக் ஓலா நிறுவனத்தின் ஷோரூமுக்கு எடுத்து செல்லப்பட்டு பழுதுநீக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அந்த நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    மேலும், ஓலா நிறுவனம் ஒரு சில பைக்குகளில் மட்டுமே இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    தளபதி 67: விஜய்யுடன் இணைந்த நட்சத்திர பட்டாளம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....