Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா vs நியூசிலாந்து; வீழ்ச்சியா? எழுச்சியா? - இன்று மூன்றாவது இருபது ஓவர் போட்டி!

    இந்தியா vs நியூசிலாந்து; வீழ்ச்சியா? எழுச்சியா? – இன்று மூன்றாவது இருபது ஓவர் போட்டி!

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறவுள்ளது. 

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இருபது ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

    மூன்று போட்டிகள் இருபது ஓவர் தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி நடைபெறவுள்ளது. 

    வீழ்ச்சியா? எழுச்சியா? என்பதன் அடிப்படையிலேயே இன்றைய போட்டியானது உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால் இன்றைய மூன்றாவது போட்டியில் வெற்றிப்பெறும் அணியே தொடரைக் கைப்பற்றும். 

    இதனால், இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாட திணறிவருகின்றனர். பந்துவீச்சாளர்களில் சுழற்பந்து வீச்சு எடுபடுகிறது. வேகப்பந்துவீச்சாளர்கள் இன்று கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஏற்கனவே ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி இழந்த நிலையில், இருபது ஓவர் தொடரையாவது கைப்பற்ற வேண்டுமெ என்ற முனைப்பில் அந்த அணி இன்று களமிறங்கும். 

    இப்போட்டியானது, அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    தளபதி 67: விஜய்யுடன் இணைந்த நட்சத்திர பட்டாளம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....