Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தளபதி 67: விஜய்யுடன் இணைந்த நட்சத்திர பட்டாளம்!

    தளபதி 67: விஜய்யுடன் இணைந்த நட்சத்திர பட்டாளம்!

    ‘தளபதி-67’ திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக்குழு நேற்று வெளியிட்டது. 

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறரா். இப்படத்திற்கு தற்காலிகமாக, ‘தளபதி-67’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  தளபதி-67 குறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து, சமூகவலைதளங்களில் ‘தளபதி-67’ என்ற ஹாஷ்டேக் அதிகளவில் டிரெண்ட் ஆனது.

    இந்நிலையில், ‘தளபதி-67’ திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி, பிரபல இயக்குநர்களான மிஷ்கினும், கௌதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் நடிகர்களாக இணைந்துள்ளனர். நடிகர் மன்சூர் அலிகானும் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

    மேலும், கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ஆதிராவாக நடித்து அனைவரையும் மிரட்டிய பிரபல பாலிவூட் நடிகர் சஞ்சய் தத், கும்பளங்கி நைட்ஸ், ஜோ& ஜோ போன்ற மலையாளத் திரைப்படங்களில் நடித்த மேத்யூ தாமஸ், நடிகை பிரியா ஆனந்த் போன்றோரும்  ‘தளபதி-67’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 

    இவர்களைத்தொடர்ந்து, நடிகர் அர்ஜூன் ‘தளபதி-67’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். வில்லன் வேடத்தில் இவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடன இயக்குநராக வலம் வந்த சாண்டி, ‘தளபதி-67’ திரைப்படத்தில் நடிகராக இணைந்துள்ளார். இவர் முன்னவே ‘3:33’ என்ற திரைப்படத்தில் நடிகராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    32 வயதுமிக்க பெண்ணை சுட்டுக்கொன்ற மர்மநபர்; தில்லியில் பரபரப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....