Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பெண்களுக்கு அடுத்த தடை! தலிபான் அரசு அதிரடி உத்தரவு

    பெண்களுக்கு அடுத்த தடை! தலிபான் அரசு அதிரடி உத்தரவு

    பொது வெளியில் குளிக்க ஆப்கானிய பெண்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. 

    ஒருபுறம் ஈரான் நாட்டில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், மறுபுறம் இங்கே ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது தலிபான் அரசு. 

    தற்போது ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான் அரசு கைப்பற்றி, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்து, அவற்றை கடைபிடிக்க வேண்டுமென வற்புறுத்தி வருகிறது. 

    கல்வி நிலையங்களில் கட்டுப்பாடு, பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லத் தடை என பல தடைகளை பெண்களுக்கு எதிராக அந்த அரசு விதித்து வருகிறது. 

    இதன்காரணமாக, பெண்கள் பலரும் உரிமைக்காக கூட போராட முடியாத சூழ்நிலை அங்கு உருவாகியுள்ளது. அந்நாட்டு பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் இணைந்து அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். 

    இதனிடையே, பொது குளியல் மையங்களில் பெண்கள் குளிக்க கூடாது என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது ஆப்கானிய பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க‘என் மகன் ஒரு மேதை, தவறாக பேசாதீர்கள் ‘ விமர்சனங்களுக்கு எலான் மஸ்க்கின் தாயார் பதிலடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....