Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்திய துணை கண்டத்தின் வரலாற்றை தமிழ்நாட்டு மண்ணிலிருந்து எழுதபட வேண்டும்; முதலமைச்சர் ஸ்டாலின்...

    இந்திய துணை கண்டத்தின் வரலாற்றை தமிழ்நாட்டு மண்ணிலிருந்து எழுதபட வேண்டும்; முதலமைச்சர் ஸ்டாலின்…

    இந்திய துணை கண்டத்தின் வரலாற்றை தமிழ்நாட்டு மண்ணிலிருந்து
    எழுதபட வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

    தமிழக அரசு சார்பில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பொருநை இலக்கிய திருவிழா இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது, இந்த நிகழ்ச்சியினை காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது பேசியர், தமிழ் சமூகம் இலக்கியம் முதிர்ச்சி, பண்பாட்டு உச்சத்தையடைந்த பெருமைகூறிய சமூகமாக உள்ளது. கீழடியை தொடர்ந்து சிவகலை, கொற்கை, அகழாய்வு, என அறிவியல் பூர்வமாக தொன்மையானது எனவும், அடுத்த தலைமுறைக்கு தமிழர்களின் இலக்கன இலக்கியத்தை எடுத்து கூறி அறிவார்ந்த சமூகத்தை வார்த்தெடுக்க வேண்டுமெனவும், செழிமை மிக்க இலக்கிய திருவிழாக்களை தமிழக அரசு பொருநை, வைகை, சிறுவாணி, காவிரி, சென்னை என ஐந்து இலக்கிய திருவிழாக்களை தமிழக அரசு நடத்தயுள்ளது.

    இதன் மூலம் தமிழ் மண்ணின் செழுமை மிக்க இலக்கிய பண்பாடு உலகிற்கு பறை சாற்றுமெனவும், இந்தியா துணை கண்டத்தின் வரலாற்றை தமிழ் மண்ணிலிருந்து எழுதபட வேண்டுமென கூறினார்.

    பொருநை இலக்கிய திருவிழாவில் மொழி பெயர்ப்பு இலக்கியம், நாட்டார் இலக்கியம், திராவிட இலக்கியம், நாஞ்சில் இலக்கியம், சிறுவர் இலக்கியம்,
    தேரி இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், என பல தலைப்புகளில் உரையாடல்கள் கருத்தரங்கங்கள், நடைபெறுகிறது.

    மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்று பாதை வசதி! நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....