Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்று பாதை வசதி! நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்...

    மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்று பாதை வசதி! நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்…

    மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

    உலக பிரசித்தி பெற்ற மெரினா கடலின் அழகை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று ரசிக்கும் வகையில், 1.09 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பாதையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.

    ஒவ்வொரும் ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்று திறனாளிகள் கடல் அழகை ரசிக்கும் வகையில், மெரினா கடற்கரையில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வந்த நிலையில் நிரந்தர பாதை அமைக்க கோரி மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர பாதை அமைக்க ஒப்பந்தம் கோரபட்டு, மர பலகைகளை கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நிரந்தர பாதை அமைக்கும் பணிகள் கடந்த சிலமாதங்களாக நடைபெற்றது. தற்போது நிறைவடைந்த நிலையில், மாற்று திறனாளிகளின் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பாதையை நாளை திறந்து வைக்க உள்ளார்.

    இதன் மூலம் மற்றவர்களை போல் மாற்று திறனாளிகலும் கடலின் அருகிலிருந்து மெரினா கடலின் பேரழகை ரசிக்க முடியும்.

    ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்குமா? எதிர்பார்ப்பில் தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....