Sunday, March 17, 2024
மேலும்
    Homeஅறிவியல்ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தபட்ட பி.எஸ்.எல்.வி. சி-54

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தபட்ட பி.எஸ்.எல்.வி. சி-54

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி -54 என்ற ராக்கெட்டை இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. 

    ஓசன்சாட்03 என்ற புவி செயற்கைகோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களுடன், இந்த பி.எஸ்.எல்.வி. சி -54 ராக்கெட் இன்று (நவம்பர் 26) முற்பகல் 11.56 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 

    ஓசன்சாட்03 என்ற செயற்கோள் 1,117 கிலோ எடை கொண்டது ஆகும். கடலின் தன்மை, அதன் மேற்பரப்பு, வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து தகவல்களை அளிக்க இந்த செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளது. 

    இதுமட்டுமின்றி, பி.எஸ்.எல்.வி. சி -54 ராக்கெட்டில், அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட் (4 செயற்கைகோள்கள்), இந்தியா மற்றும் பூடான் நாடுகள் இணைந்து தயாரித்த ஐஎன்எஸ்-2பி, துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட் (2 செயற்கைகோள்கள்) பிக்சலின் அணிந்த உள்பட 8 நானோ செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டுள்ளன. 

    பி.எஸ்.எல்.வி. சி -54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், ராக்கெட் செயல்பாடு திட்டமிட்டப்படி சென்றுகொண்டிருப்பதாகவும், 8 நானோ செயற்கைகோள்களும் ஒவ்வொன்றாக திட்டமிட்டப்படி நிலைநிறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  

    தமிழ்நாடு அரசின் 2023-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது ; தமிழக அரசு அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....