Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்குமா? எதிர்பார்ப்பில் தமிழக அரசு

    ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்குமா? எதிர்பார்ப்பில் தமிழக அரசு

    ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதியிருந்த நிலையில் சட்டத்துறை மூலமாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா ஆளுநர் தரப்பில் நேற்று விளக்கம் கேட்கப்பட்டது.
    அதில், ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என்றும், இதற்கு முன்பாக கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் அளிக்க சில கேள்விகளையும் ஆளுநர் எழுப்பி உள்ளார்.

    இது தொடர்பாகவே சட்டத்துறை உரிய விளக்கத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.தமிழ்நாடு அரசு விளக்கம் கொடுத்திருக்கக் கூடிய நிலையில் ஆளுநர், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை- அரசு விளக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....