Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்னும் ஆட்டமே ஆரம்பம் ஆகல... 9ம் தேதிக்கு மேல பாருங்க...? மழை குறித்து வெதர்மேன் அப்டேட்

    இன்னும் ஆட்டமே ஆரம்பம் ஆகல… 9ம் தேதிக்கு மேல பாருங்க…? மழை குறித்து வெதர்மேன் அப்டேட்

    வடகிழக்குப் பருவமழையின் ஆட்டம் 9ம் தேதிக்கு மேல் ஆரம்பிக்கும் என்றும் ,அது படு பயங்கரமாக இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

    தனி நபராக வானிலை குறித்த தகவல்களை வழங்குவதில் தமிழ்நாடு வெதர்மேன் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.இவர் இன்று தமிழகத்தில் மழை நிலவரம் எவ்வாறாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் தென் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வடசென்னையில் மாலையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும் எல்லா மேகங்களும் சேர்ந்து 30 நிமிடங்களில் 60 மிமீ வரை மழையாக பொழிய வாய்ப்பில்லை . எனவே சிறிது சிறிதாக ஆங்காங்கே பெய்யும் மழைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருக்காது .. சென்னையில் வெயில் தென்பட அதிக வாய்ப்புகள் அவ்வப்போது ஏற்படும்.அதே சமயம் ஆங்காங்கே மழை பெய்யும்.

    டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர்,தென் தமிழகமான மதுரை, ராமந்தபுரம், ஊட்டி, திருநெல்வேலி , விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்றோ நாளையோ நல்ல மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல் தற்போது தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. ஆனால் நவம்பர் 9-க்குப் பிறகு காற்றழத்த தாழ்வுப்பகுதி, காற்றழத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது .அது மேலும் புயலாக மாற கூடும் .எனவே நவம்பர் 9-க்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை இன்னும் தீவிரமாக இருக்கும் என பிரதீப் ஜான் அவர்கள் தனது தமிழ்நாடு வெதர்மேன் இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அவரை கொல்லவே சுட்டேன்; இம்ரான் கானை காலில் சுட்டவர் வாக்குமூலம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....