Friday, March 15, 2024
மேலும்
    Homeவானிலைநவம்பர் 9-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- பாலச்சந்திரன் அறிவிப்பு

    நவம்பர் 9-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- பாலச்சந்திரன் அறிவிப்பு

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற நவம்பர் 9 ஆம் தேதி உருவாகும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

    இந்நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது அவர், தெரிவித்துள்ளதாவது:

    கன்னியாகுமரி, நெல்லை, கோவை, தென்காசி ஆகிய இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும். 

    தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே உருவாகும் குறைந்த தாழ்வழுத்த பகுதி தமிழகம் புதுவையை நோக்கி நகரக்கூடும். அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

    குமரி, நெல்லை, கோவை, தென்காசி ஆகிய இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும். 12 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை தண்டையார்பேட்டையில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

    நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். 10, 11 ஆகிய தேதிகளில் கரையை கடக்கும். இதனால், சென்னையில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மீனவர்கள் 8, 9 பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: 200 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் செல்லாத அதிசய கோயில்; ஆண்களுக்கு மட்டுமே அனுமதி.. ஏன் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....