Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலகக் கோப்பை; அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து...

    டி20 உலகக் கோப்பை; அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து…

    2022-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிக்குள் நுழையும் முதல் அணி என்கிற பெருமையை நியூசிலாந்து அணி பெற்றது. 

    இருபது ஓவர் உலகக் கோப்பை கொஞ்சம் கொஞ்சமாக இறுதிக்கட்டத்தை நெருங்கிவருகிறது. வருகிற ஞாயிறுடன் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நிறைவு பெறுகின்றன. இந்நிலையில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்குள் நுழையப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன. 

    இந்த தொடரில், அனைத்து அணிகளும் குறைந்தது ஒரு தோல்வியையாவது எதிர்கொண்டதால் அரையிறுதிக்குத் தகுதி பெற பலத்த போட்டி நடைபெற்று வருகிறது. எந்தளவிற்கு போட்டியென்றால், ஒரு அணியின் அரையிறுதி வாய்ப்பு மற்ற அணியின் தோல்வியை பொறுத்தும், ரன் ரேட்டை பொறுத்தும் அமைகிறது. 

    இன்று அயர்லாந்திற்கும் நியூசிலாந்திற்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்த உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிக்குள் நுழையும் முதல் அணி என்கிற பெருமையை நியூசிலாந்து அணி பெற்றது. 

    ஒரு தோல்வி, 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளோடு முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, ரன்ரேட்டில் கொஞ்சம் பின்தள்ளியே இருந்தது. ஆஸ்திரேலியா 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் நியூசிலாந்தை நெட் ரன்ரேட்டில் பின்னுக்குத் தள்ள முடியும். அப்படி நிகழ்ந்தால் ஆஸ்திரேலியா முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். ஆனால், இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. 

    இதையடுத்து அரையிறுதிக்கு நுழைந்த முதல் அணி என்கிற தகுதியை அடைந்தது நியூசிலாந்து அணி.

    இதையும் படிங்க: ‘க.நெடுஞ்செழியன்‌ அவர்களின்‌ புகழ்‌ வாழ்க!’ – உருகிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....