Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உலகின் மிக அழுக்கான மனிதர் காலமானார் ! 50 வருஷமா குளிக்கல... ஆனா இத்தன வருஷம்...

    உலகின் மிக அழுக்கான மனிதர் காலமானார் ! 50 வருஷமா குளிக்கல… ஆனா இத்தன வருஷம் வாழ்ந்தாரா ?

    குளித்தால் இறந்து விடுவோம் என்ற பயத்தில் அரை நூற்றாண்டுகளாக குளிக்காமல் இருந்த ,”உலகின் அழுக்கு மனிதர்” என்று பெயர் பெற்ற ஈரானிய நாட்டைச் சேர்ந்த அமௌ ஹாஜி நேற்று உயிரிழந்தார்.

    எல்லா நாட்களிலும் குளியல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகவே எல்லோராலும் பார்க்கப்படுகிறது . இது கால நிலைகளை பொறுத்து மட்டுமில்லாமல் அன்றாட வாழ்வில் நம்முடைய கடமையாகவும்,உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ளவும் ,சுகாதாரத்தை பேணிக்காக்கவும் செய்யப்படக்கூடிய ஒரு செயல் ஆகும் .

    அப்படிப்பட்ட நிலையில் ஒருவர் ஒருவாரம் அலல்து ஒருமாதம் .,குளிக்காமல் இருந்தவர்கள் குறித்து கேள்விப்பட்டு இருப்பீர்கள். இல்லை அதிகபட்சமாக ஒரு வருடம் கூட குளிக்காமல் இருப்பவர்களை பார்த்து இருப்பீர்கள் .

    ஆனால் இங்கு அரை நூற்றாண்டுக்கும் மேலாக குளிக்காத ஒருவர் இருக்கிறார். அவர் செல்லமாக ‘உலகின் அழுக்கு மனிதர்’ என்றும் அழைக்கப்படுகிறார் .ஈரானின் 31 மாகாணங்களில் ஒன்றான ஃபார்ஸின் தெற்கு மாகாணத்தில் உள்ள தேஜ்கா என்ற கிராமத்தில் தனிமையில் வசித்து வந்தவர்தான் அமு ஹாஜி. இவருக்கு தண்ணீர் என்றாலே மிகவும் பயமாம் .இதனால் குளிப்பதை தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார் .

    Amou Haji, Known as 'World's Dirtiest Man,' Dead at 94 'Not Long After' First Bath in 60 Years

    ஒரு கட்டத்தில் இவர் அருகில் செல்லவே முடியாத நிலை ஏற்பட்டு ,அந்த பகுதியை சேர்ந்த பலர் ஹாஜியை குளிக்கவைக்க முயற்சி செய்துள்ளனர் .ஆனால் அவர்கள் மேற்கொண்ட அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

    காரணம் “உடல்நிலை சரியில்லாமல் போய்விடும்” என்ற அச்சத்தில் அமு ஹாஜி குளிப்பதை தவிர்த்து வந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரை எப்படியாவது குளிக்க வைத்து விட வேண்டும் என்று போராடிய உள்ளூர் வாசிகள் “சில மாதங்களுக்கு முன்பு தான் அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று முதல் முறையாக, குளிப்பாட்டியுள்ளனார்கள்” என்று உள்ளூர் செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், ‘உலகின் மிக அழுக்கான மனிதர்’ என பெயர்பெற்ற அமு ஹாஜி தற்போது உயிரிழந்துள்ளார்.ஈரானின் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனத்தின்படி, அவர் குளித்த சிறிது நேரத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக கூறப்பட்டுள்ளது .

    இதையும் படிங்க: கோவை கார் வெடி விபத்தில் கைதான 5 பேர் மீது பாய்ந்தது உபா சட்டம்! இனி அடுத்து என்ன நடக்கும்?

    The Story Of Amou Haji, The 'Dirtiest Man In The World'

    அதுமட்டுமின்றி பல ஆண்டுகளாக குளிக்காமல் இருந்ததால், அவர் உடம்பு முழுவதும் சீழ் படிந்து காணப்பட்டதாகவும் ,அவர் அணிந்திருந்த “சூட் ” மிகவும் ஆளுக்கு படிந்து காணப்பட்டதாகவும் கூறியுள்ளது .அவரை குளிப்பாட்டவோ, அல்லது குடிக்க சுத்தமான தண்ணீரைக் கொடுக்கவோ செய்த முயற்சிகள் அவரை வருத்தமடையச் செய்ததாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அதேபோல் அவர் உண்பதற்காக வைத்திருந்த உணவில் அழுகிய இறைச்சி மற்றும் பழைய எண்ணெய் கேனில் இருந்து குடித்த சுகாதாரமற்ற தண்ணீர் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

    மேலும் அவர் புகைபிடிப்பதை விரும்புபவர் என்பதனால் குறைந்தது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிகரெட்டுகளை தூக்கியபடி பிடிப்பாராம் .இதுதவிர பழைய குழாய் போன்ற துவாரம் வழியாக விலங்குகளின் மலத்தை வைத்து புகைப்பதையும் ரசித்து செய்வாராம். அப்படி அவர் புகை பிடிக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

    World's dirtiest man who didn't bathe for over 50 years dies in Iran at 94;

    இந்நிலையில் 2014 -ஆம் ஆண்டு தெஹ்ரான் டைம்ஸ் என்ற பத்திரிக்கைக்கு அவர் அளித்திருந்த நேர்காணலில், தனக்குப் பிடித்த உணவு முள்ளம்பன்றி என்று கூறியுள்ளார் .மேலும் அவர் டெஜ்கா கிராமத்தில் அண்டை வீட்டாரால் கட்டப்பட்ட செங்கல் குடிசைக்கு இடையில் இருந்த தரை தளத்தோடு கூடிய ஒரு சிறிய துளையில் வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இவர் குறித்த தகவல்களை வாழ்க்கை “தி ஸ்ட்ரேஞ்ச் லைஃப் ஆஃப் அமு ஹாஜி” என்ற தலைப்பில் ஒரு சிறு ஆவணப் படமாக எடுத்து , 2013 வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அமு ஹாஜியின் புகைப்படங்கள்சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன, அவரது ‘குளிக்காத’ பதிவு உண்மையா என்றும் நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகினறனர்.

    இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை விடுமுறை எதிரொலி: கோயம்பேடு சந்தையில் நாளை எந்த பணிகளும் நடைபெறாது

    Amou Haji

    இருப்பினும், அதிக நேரம் குளிக்காமல் சென்றவர் என்ற சாதனையை அமு ஹாஜி படைத்துள்ளாரா என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே உள்ளது. 2009-ஆம் ஆண்டு வாரணாசிக்கு வெளியே ஒரு கிராமத்தில் வசித்த கைலாஷ் “கலாவ்” சிங் என்பவர் 35 ஆண்டுகளாக குளிக்கவில்லை என்றும், அவர் உடலில் உள்ள அனைத்து கிருமிகளையும் தொற்றுகளையும் அழிக்க உதவும் “தீக் குளியலை” விரும்புவதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது .ஆனால் அந்த நபர் இப்போது உயிரோடு இருக்கிறாரா ,அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்த எந்த தகவல்களும் தெரியவில்லை.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....