Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தளபதி 67 அப்டேட் - வில்லன் இவரா..இது லிஸ்ட்லயே இல்லையே!

    தளபதி 67 அப்டேட் – வில்லன் இவரா..இது லிஸ்ட்லயே இல்லையே!

    நடிகர் விஜய்யின்-67 ஆவது திரைப்படத்தில் அர்ஜூன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் சறுக்கலை சந்தித்தது. அதேசமயம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் வெற்றியை சந்தித்தது. 

    இதைத்தொடர்ந்து, விஜய் நடிப்பில், இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இருப்பினும், வாரிசு திரைப்படத்தைக் காட்டிலும் நடிகர் விஜய்யின் 67-ஆவது திரைப்படம் குறித்த பேச்சு என்பது தினந்தோறும் சினிமா வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 

    மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தளபதி விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் விஜய்யின் 67-ஆவது திரைப்படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே உள்ளது. உறுதியும் ஆகி விட்டது. 

    இந்நிலையில், விஜய்யின் 67-ஆவது திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், அர்ஜூனுக்கு ரூ.4 கோடி பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

    மேலும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் ‘விஜய் 67’ படத்தில் நடிக்க உள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

    ரூ.40,000-த்தில் பெருநிறுவன அமைச்சகத்தின் கீழ் வேலை; விண்ணப்பிக்க வாய்ப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....