Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜம்முவில் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; ஓடிய ஓட்டுநர்.. தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர்

    ஜம்முவில் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; ஓடிய ஓட்டுநர்.. தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர்

    ஜம்முவில் இன்று காலை வாகனச் சோதனையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    ஜம்முவில் இன்று காலை வழக்கம் போல் பாதுகாப்பு படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காலை 7 மணியளவில் டிரக் ஒன்று வந்தது. இந்த வழியில் பொதுவாக இப்படியான டிரக்குகள் வருவதில்லை என்பதால், பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. 

    அந்த வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு,  சிறுநீர் கழிக்கச் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதனால், பாதுகாப்பு படையினர் அந்த வாகனத்தை நெருங்கியதாகவும், அப்போது வாகனத்திலிருந்து பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி குண்டுகள் வந்தன. 

    இதனால், பாதுகாப்பு படையினர் உடனே பதில் தாக்குதல் நடத்தினார்கள். இதில், ட்ரக்கில் இருந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  தப்பி ஓடிய ஓட்டுநரை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். 

    தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இது குறித்து டிஜிபி கூறுகையில், ‘ஜனவரி 26 குடியரசு தின விழாவை முன்னிட்டு இப்போதிருந்தே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். இந்நிலையில் தான் இந்த மூன்று தீவிரவாதிகளும் சுடப்பட்டுள்ளனர். அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இந்த தீவிரவாதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.’ என்று தெரிவித்துள்ளார். 

    மேலும், தீவிரவாதிகள் பயன்படுத்திய வாகனத்தில் வெடிப் பொருட்கள் இருந்ததால் வாகனம் எரிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    சீனாவிலிருந்து தமிழகம் வந்த இருவர்; உறுதியான கொரோனா..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....