Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுற்றவாளிகள் ஊருக்குள் நுழையத் தடை...வரலாற்றில் இதுதான் முதல் முறையாம்..

    குற்றவாளிகள் ஊருக்குள் நுழையத் தடை…வரலாற்றில் இதுதான் முதல் முறையாம்..

    குற்றவாளிகள் 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்து நெல்லை மாவட்ட நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெரும்புத்தூர் பஞ்சாயத்து பாஞ்சாங்குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆதி திராவிடப் பள்ளி ஒன்று இடம் பெற்றுள்ளது. 

    இந்நிலையில், ஆதி திராவிடப் பள்ளி மாணவர்கள் தின்பண்டம் வாங்குவதற்காக அங்குள்ள பெட்டிக் கடைக்கு சென்றனர். அப்போது கடை உரிமையாளர், ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் இனி உங்களுக்கு தின்பண்டம் தர முடியாது என்றும் வீட்டில் சென்று இதனைச் சொல்லுமாறும் கூறியுள்ளார். 

    இந்த நிகழ்வானது வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அந்த பெட்டிக்கடையின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    இதையும் படிங்க: ஆபாச காணொளிகள் ட்விட்டரில் வெளியான விவகாரம்- மாணவிகள் தற்கொலை முயற்சி

    மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர் அந்த பெட்டிக் கடைக்கு சீல் வைத்தனர். 

    இந்நிலையில், பாஞ்சாகுளம் தீண்டாமை விவகாரத்தில் சம்மந்தப்பட்ட
    குற்றவாளிகள்  6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்து நெல்லை மாவட்ட நீதிபதி பத்மநாபன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    தமிழ்நாட்டில் முதல் முறையாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....