Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுடியூப் லைட்டை உடைத்து தப்பிக்க முயன்ற கைதி; பரபரப்பில் நீதிமன்ற வளாகம்

    டியூப் லைட்டை உடைத்து தப்பிக்க முயன்ற கைதி; பரபரப்பில் நீதிமன்ற வளாகம்

    தென்காசி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் டியூப் லைட்டை உடைத்துவிட்டு தப்பியோட முயன்ற கைதியால் பரபரப்பு ஏற்பட்டது. 

    தென்காசி மாவட்டத்தில் மேலநீலிநதநல்லூர் பகுதியில், சில தினங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சாலையில் தன் பைக்கை நிறுத்திவிட்டு கார்த்திக் என்பவர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். 

    மருத்துவமனையை விட்டு வெளியில் வந்து பார்த்தபொழுது, கார்த்திக் நிறுத்தி விட்டுச்சென்ற பைக்கை காணவில்லை. உடனே அக்கம் பக்கம் அவர் தேட, பைக் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, அவர் போலீஸில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸாரும் விசாரணை மேற்கொண்டனர். 

    இதன்பின்பு, சிசிடிவி கேமிராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஜோதி மாரியப்பன் என்பவர் பைக்கைத் திருடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். 

    கைது செய்யப்பட்ட ஜோதி மாரியப்பன், சங்கரன்கோவில் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட அழைத்துச் செல்லப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் சென்றுக்கொண்டிருந்த போது ஜோதி மாரியப்பன் அங்கிருந்த டியூப் லைட்டை உடைத்தார். சத்தம் கேட்டவுடன் அனைவரும் டியூப் லைட்டை பார்க்க, ஜோதி மாரியப்பன் தப்பிச்செல்ல முயன்றார். 

    ஆனால், சூதானித்த போலீஸார் ஜோதி மாரியப்பனை மடக்கி பிடித்தனர். இச்சம்பவத்தால் சங்கரன்கோவில் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    கைலாசாவை அங்கீகரித்த அமேரிக்கா! நெவார்க்கும் நியூயார்க்கும்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....