Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபொள்ளாச்சியில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா கோலாகலம்

    பொள்ளாச்சியில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா கோலாகலம்

    தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பொள்ளாச்சியில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 

    தமிழகத்தின் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்தும் விதமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. முதல் முறையாக சுற்றுலாத் துறை சார்பில் இந்தத் திருவிழா நடைபெறுகிறது. 

    கோவை ஆச்சிபட்டி மைதானத்தில் தொடங்கிய இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லான்ட், அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 12 வெப்ப காற்று பலூன்கள் இங்கு பறக்கவிடப்பட்டுள்ளன. 

    இந்த பலூன் திருவிழாவை பல மாநிலங்கள் இருந்து வந்திருக்கும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த பலூன் திருவிழா இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது. வெப்ப காற்று பலூனில் பறப்பதற்கு நபர் ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இதுபோன்ற பலூன் திருவிழா வெளிநாடுகளில் நடைபெறும் என்றும், தமிழ்நாட்டில் பலூன் திருவிழா நடைபெறுவது மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும், திருவிழாவை காண வந்த சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். 

    அதேசமயம் வெப்ப காற்று நிறைந்த பலூனில் பறப்பதற்கு நபர் ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் இதில் பயணிக்க முடியாத நிலை இருப்பதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பலூனில் பயணிக்க கட்டணத்தை குறைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    கைலாசாவை அங்கீகரித்த அமேரிக்கா! நெவார்க்கும் நியூயார்க்கும்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....