Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதற்காலிக ஆசிரியர் நியமனமானது முறைகேட்டுக்கு வழிவகுக்கும்- உயர்நீதிமன்றம்

    தற்காலிக ஆசிரியர் நியமனமானது முறைகேட்டுக்கு வழிவகுக்கும்- உயர்நீதிமன்றம்

    தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

    அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் நடைபெறவுள்ளது. 

    தேர்வு நடைபெற்று புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்கு காலவிரயம் ஆகுமென்பதால், தற்காலிகமாக அந்த இடங்களை நிரப்பிக் கொள்ள பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

    இந்த அறிவிப்பினையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. தற்காலிக பணிநியமனமானது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் எனவும், தங்களுக்கு விரும்பிய நபர்களை பணியில் அமர்த்த மாவட்ட கல்வி அலுவலர்கள் முயலலாம் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

    ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து இந்த பணிநியமனமானது தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தத நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் இதனை எதிர்த்து புகார்கள் வந்துகொண்டே இருந்ததால் திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனமானது நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

    ஆபத்தானது தற்காலிக பணி நியமனம்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

    இன்று காலையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தினை நிறுத்தி வைக்கும் அறிவிப்பானது வெளியானதிலிருந்தே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

    இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பினை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கானது இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதி, தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது. முறையான வழிகாட்டுதல் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது நல்லதன்று. இந்த மனு குறித்து அரசு தரப்பில் விளக்கம் கேட்டுத் தெரிவிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கின் மீீதான அடுத்த கட்ட விசாரணையானது நாளை (ஜூலை 01) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தற்காலிக ஆசிரியர் நியமன உத்தரவு ரத்தாகிறதா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....