Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதிருநீறு பூசி பள்ளி வந்ததால் கேளிக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி; ஆசிரியர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

    திருநீறு பூசி பள்ளி வந்ததால் கேளிக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி; ஆசிரியர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

    திருப்பூர் அரசு பள்ளி ஒன்றில், ஆசிரியை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாக அப்பள்ளியில், படிக்கும் மாணவி புகார் தெரிவிக்கும் வகையில், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    திருப்பூர் மாவட்டம், அரசு பள்ளி ஒன்றில் அந்த மாணவி 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் அந்த மாணவி, நெற்றில் திருநீறு பூசி, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து வருவது வழக்கம் என்று கூறுகின்றனர். மேலும் அப்பள்ளி தமிழ் ஆசிரியை, “நெற்றியில் தினமும் பட்டை அடித்து வர தெரிகிறது; ஆனால் ஒழுங்காக படிக்க தெரியாதா” என்று கடிந்துக் கொண்டதாக தெரிகிறது. 

    தினமும் வகுப்பு தொடங்கும் முன், குறிப்பிட்ட கடவுள் பெயர்ச் சொல்லி இரு கைகளையும் இறுக்கி நெஞ்சில்  வைத்தபடி, பிராத்தனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதுமட்டும் அல்லாமல், மாணவர்களின் விருப்ப தெய்வத்தை கேட்ட போது, அந்த மாணவி சிவன் என்று குறிப்பிட்டதும், அந்த ஆசிரியை அதற்கு கேளி செய்யும் வகையில் பேசியதாகவும் தெரிகிது.

    தமிழ் ஆசிரியர் மட்டுமல்ல, ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியரும், விபூதி பூசி வந்தமையை குறிப்பிட்டு கையெழுத்து பயிற்சியின் போது, முருகன், சிவன் என்று எல்லாம் எழுதக் கூடாது என்று கண்டித்ததாகவும் மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

    இதனால், தங்கள் பெண் அச்சத்தில் உள்ளதாகவும், ஆசிரியர்களின் மேல் பயம் கொண்டதால், பள்ளி செல்லவே மறுக்கிறாள் என்றும் புகார் அளித்துள்ளனர்.  

    மாணவியின் பெற்றோர், சமூக வலைத்தளத்திலும் தங்கள் மகள், பேசும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதிலும், இந்த புகார்களை குறிப்பிட்டுதான் அந்த மாணவி பேசியுள்ளார்.

    தங்கள் பெண் இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து விசாரித்து வருவதாகவும் ஆதாரங்கள் கிடைத்தால், இதற்கடுத்தகட்ட  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பள்ளியில் படிக்க பைபிள் கட்டாயமா? கர்நாடகாவில் உருவெடுக்கும் அடுத்த பிரச்சனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....