Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமுயன்ற ராயுடு, கை விட்ட தோனி; அதிரடி காட்டிய தவான் - ஐபிஎல் பார்வை!

    முயன்ற ராயுடு, கை விட்ட தோனி; அதிரடி காட்டிய தவான் – ஐபிஎல் பார்வை!

    நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த பலப்பரீட்சையில், பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது. 

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால், பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் ஆடியது. பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் இந்த போட்டியிலும் பெரிய இன்னிங்ஸை மேற்கொள்ளாமல் பெவிலியன் திரும்பினார். 

    பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் இரண்டே நபர்கள் அணியின் ஸ்கோரை நிர்ணயித்துவிட்டனர் என்றுதான் கூற வேண்டும். அதனில், முதன்மையானவர் ஷிகர் தவான் ஆவர். நேற்று அவர் தனது அதிரடி ஆட்டத்தால் சுமார் 59 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். தவானின் வெறித்தன ஆட்டத்திற்கு, உறுதுணையாக ஆடிய ராஜபக்சே அவர்கள் 42 ரன்கள் எடுத்தார்.

    இந்த இருவரின் முயற்சியால் 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணியானது, நான்கு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 188 ரன்கள் இலக்காக விதிக்கப்பட்டது.

    இந்த இலக்கை அடைவதற்காக களமிறங்கிய சென்னை அணியில் பல சொதப்பல்கள் நிகழ்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களில் ருத்ராஜ் கெய்க்வாட் சிறிது நேரம் நிலைக்க, மற்ற வீரர்கள் அனைவரும் களத்திற்கு வருவதும், பெவிலியனுக்கு திரும்பவதுமாய் இருந்தனர். 

    பின்னர், அம்பத்தி ராயுடு ஆட்டக்களத்தில் களமிறங்க, அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தன்னால் இயன்ற வரை போராடிய அம்பத்தி ராயுடு 78 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இவருக்கு முன்பாகவே ருத்ராஜ் கெய்க்வாட் 30 ரன் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.

    அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட தோனியும், 12 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து, 176 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

    இந்த தோல்வியின் மூலம், சென்னை அணியானது புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து ஒன்பதாவது இடத்திலேயே உள்ளது. மேலும், இப்போட்டிக்கான ஆட்ட நாயகன் விருது ஷிகர் தவானுக்கு வழங்கப்பட்டது. நேற்றைய அதிரடி ஆட்டத்தின் மூலம், ஷிகர் தவான் சென்னை அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிக்கலாமே; பள்ளியில் படிக்க பைபிள் கட்டாயமா? கர்நாடகாவில் உருவெடுக்கும் அடுத்த பிரச்சனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....