Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆளுநரை புறக்கணிக்கிறதா ஆளுங்கட்சி? புதிய சட்டத் திருத்த மசோதாவின் நோக்கம் என்ன?

    ஆளுநரை புறக்கணிக்கிறதா ஆளுங்கட்சி? புதிய சட்டத் திருத்த மசோதாவின் நோக்கம் என்ன?

    பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் என்ற சட்டத்திருத்த மசோதா இன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    தமிழ்நாடு பல்கலைக்கழங்கள் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் பொன்முடி தமிழக சட்டசபையில் இன்று அறிமுகம் செய்தார். மேலும் இந்த சட்டத் திருத்த மசோதாவின் மீது விவாதம் நடத்தப்பட்டது. இதனை எதிர்த்து, எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. 

    தமிழ்நாட்டின் துணை வேந்தராக ஆளுநரும், இணை வேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சரும் இருப்பதால் கொள்கை முடிவுகளை அரசால் எடுக்க முடிவதில்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பல்கலைக்கழக முடிவுகளை எடுக்க முடியாமல் போவதாகவும், இதனால் பல்கலைக்கழங்களில் பல குளறுபடிகள் நிகழ்ந்து வருவதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டப் பின்னே இந்த சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது. 

    ஆளுங்கட்சியின் இந்த முடிவு, பல்வேறு உள்ளடக்கங்களை குறிப்பதாக தெரிகிறது. ஆளுநரிடம் ஏற்கனவே பல சட்ட மசோதாக்கள் கிடப்பில் இருக்கிறது என்றும், மத்திய அரசுக்கு அனுப்பிட வேண்டியவைகளை ஆளுநர் ஏன் அனுப்பாமல் மௌனம் காக்கிறார் என்றும், பல கேள்விகள் கேட்கப்பட்டு வந்த நிலையில, இன்று  இந்தச் சட்ட திருத்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    ஆளுங்கட்சியான திமுக அரசு, ஏப்ரல் 14 ஆம் தேதி ஆளுநர் அளித்த தேனீர் விருந்தில், முதலில் கலந்துக் கொள்வதாக கூறி பின்பு கலந்துக் கொள்ளவில்லை. அதற்கும், இதுவே தான் காரணம் என்று பேசப்பட்ட நிலையில், ஆளுநர் இருப்பதால் தான் பல்கலைக்கழங்களில் மாநில அரசால் எந்த முடிவுகளும் எடுக்க முடியவில்லை எனக் கூறி, இந்த சட்டத் திருத்த மசோதாவை கொண்டுவந்துள்ளதாக இப்போது பேசப்படுகிறது. 

    கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு, ஆளுநர் சென்ற காரின் மீது கருப்பு கொடி வீசப்பட்டதாக பெரும் புகார்கள் எழுந்தது. திமுக கட்சியின் கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் மற்றும் விசிக ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டதும் திமுக கட்சி ஆளுநரை புறக்கணிப்பதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆளுநர், அதற்கு அடுத்த நாளே டெல்லி புறப்பட்டு சென்றதும் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

    கடந்த 2017 ஆம் ஆண்டு, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் கூண்டாக வெளியேற்றப்பட்டடனர். அப்போது,  தற்போதைய முதல்வரின் சட்டைப்பை கிழக்கப்பட்டதும், அதன்பிறகு அப்போதைய தமிழக ஆளுநரான பன்வாரிலால் பிரோகித்தை முக.ஸ்டாலின் சந்தித்து பேசியதும்  நினைவு கூற வேண்டிய ஒன்றாகும்.

    தமிழகத்தில் நடந்ததை அவர், மத்திய அரசிடம் கூற சென்றதாக பேசப்பட்ட நிலையில், திமுக அரசு, மீண்டும் ஆளுநருக்கு தனது எதிர்ப்பை, இந்தச் சட்டத் திருத்த மசோதாவின் மூலம் நிரூபித்துள்ளது என்றே கூறலாம். 

    இதையும் படியுங்கள், அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் ஆளும் அரசுகள் ஈடுபடுகிறதா? – சீமானின் அறிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....