Saturday, May 4, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைஆசிரியர்கள் தினத்தின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

    ஆசிரியர்கள் தினத்தின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

    ஆசிரியர்கள் தினம் கொண்டாடக் காரணம் என்ன?

    மாதா, பிதாவிற்கு அடுத்து வருவது குரு. குருவான ஆசிரியர்கள் நமக்கு பாடத்தை கற்பிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுக்கம், நற் சிந்தனை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கற்று தருகிறார்கள். அப்படிபட்ட ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்படுகிறது. 

    இந்தியாவில் ஆசிரியர்கள் தினம்:

    மேலும், சுதந்திர இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசு தலைவரும் சிறந்த தத்துவ பேராசிரியருமான டாக்டர் ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையிலும் செப்டம்பர் 5 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.  

    டாக்டர் ராதா கிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ளே சர்வ பள்ளி என்ற இடத்தில் 1888 ஆம் ஆண்டு பிறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் தத்துவத்தை முதற்பாடமாக எடுத்து படித்து, மைசூர் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்களில் தத்துவ பேராசிரியராக பணியாற்றினார். இவர் எழுதிய மிகச் சிறந்த படைப்பான ‘இந்தியத் தத்துவம்’ 1923 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. டாக்டர் ராதா கிருஷ்ணன் இந்திய கல்வி முறையின் தேவைகளையும், இந்தியாவில் சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், பெரிதும் உதவியவர் ஆவார். 

    உலக ஆசிரியர்கள் தினம் எப்போது?

    அதே சமயத்தில், உலகின் பல்வேறு நாடுகளிலும் செப்டம்பர் 5 நாள் ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், மற்ற நாடுகளில் வெவ்வேறு தேதிகளிலும் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 

    ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) கடந்த 1994 ஆம் ஆண்டு கல்வி தொடர்பாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மிகச் சிறந்த கல்வியாளர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் நாளில் ‘உலக ஆசிரியர்கள் தினம்’ அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, பல நாடுகள் இந்த நாளில் ஆசிரியர்கள் தினத்தை கொண்டாடி வருகின்றன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....